Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Male : Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Male : Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Manjalodu mangala kungumam
Ponmagal kondaada….

Female : Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Female : Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Sonthangalil paasamum nesamum
Kaaviyam endraaga

Male : Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Female : Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Female : Yaerai pidiththavan yaettram peruvathu
Paanai pidiththaval panpaalae
Male : Kodi irunthaalum konjam irunthaalum
Koodi irukkanum anbaalae

Female : Anbu ennum poovaalae
Katti vaiththa poomaalai
Male : Vannam kondu vaadaamal
Minnugindra ponmaalai

Female : Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Male : Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Male : Mooththa uravugal koorum arivurai
Yaettru nadappathu panpaadu
Female : Koottu kudumpaththin kootti pirikkaamal
Kaaththu kidappathu penn paadu

Male : Mooththa uravugal koorum arivurai
Yaettru nadappathu panpaadu
Female : Koottu kudumpaththin kootti pirikkaamal
Kaaththu kidappathu penn paadu

Male : Suttrangalai eppothum
Kuttram sollakoodaathu
Female : Sakkarangal illaamal
Vandi mattu odaathu

Male : Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Female : Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Male : Maalai koduththavan thaali mudiththavan
Thevai arinthaval pendaatti
Female : Kaalam muzhuvathum kooda nadakkaiyil
Kondavanae kaikkaatti

Male : Maalai koduththavan thaali mudiththavan
Thevai arinthaval pendaatti
Female : Kaalam muzhuvathum kooda nadakkaiyil
Kondavanae kaikkaatti

Male : Nalla makkal thaayaaga naayagiyae nee vaazhga
Female : Naayagiyae neengaamal naayaganae nee vaazhga

Male : Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Male : Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Manjalodu mangala kungumam
Ponmagal kondaada….

Female : Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Female : Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Sonthangalil paasamum nesamum
Kaaviyam endraaga….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

ஆண் : இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட…..

பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

பெண் : இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக…….

ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

பெண் : ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது
பானை பிடித்தவள் பண்பாலே
ஆண் : கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும்
கூடி இருக்கணும் அன்பாலே

பெண் : அன்பு என்னும் பூவாலே
கட்டி வைத்த பூமாலை
ஆண் : வண்ணம் கொண்டு வாடாமல்
மின்னுகின்ற பொன்மாலை……

பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

ஆண் : மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு
பெண் : கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு

ஆண் : மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு
பெண் : கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு

ஆண் : சுற்றங்களை எப்போதும்
குற்றம் சொல்லக்கூடாது
பெண் : சக்கரங்கள் இல்லாமல்
வண்டி மட்டும் ஓடாது

ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

ஆண் : மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண் : காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி

ஆண் : மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண் : காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி

ஆண் : நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க
பெண் : நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க

ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

ஆண் : இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட…..

பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

பெண் : இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here