Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Intha naadagam indru paarkkaiyil
Antha naala niyaapagamo
Female : Nalla naal sobananthaan
Nenjellaam mogananthaan
Intha odikal Indru paarppathu
Andru naamum paarththathuthaan
Male : Anthi maalai santhirothayam
Andruthan mudhaliravu
Vanna maalai ponnoviyam
Vanji nee varumpozhuthu
Female : Viral theendavum sugam vendavum
Thirumeni naan silirththaenae
Male : Idai thedavum nadai podavum
Vilaiyaada naan thudiththaenae
Female : Nalla naal sobananthaan
Nenjellaam mogananthaan
Female : Metti osai sangeethamaai
Mella naan nadanthu vara
Pattu selai munthaanaiyaa
Thottu nee thodarnthu vara
Male : Pasumpaalaiyum pazhachchaaraiyum
Parugaamal naan irunthaenae
Unnai paarththathum udal verththathum
Parimaara naan maranthaenae….
Male : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Male : Mullai poovum panneeraiyum
Meththai mel theliththirukka
Thangapaalam pennaagiyae
Angamthaan joliththirukka
Female : Killi paarkkavum alli serkkavum
Palli paadam nee padiththaauae
Anbu paathiyum
Rompa neram nee nadiththaayae
Female : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Male : Intha naadagam indru paarkkaiyil
Antha naala niyaapagamo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
இந்த நாடகம் இன்று பார்க்கையில்
அந்த நாளை ஞாபகமோ…..
பெண் : நல்ல நாள் சோபனந்தான்
நெஞ்செல்லாம் மோகனந்தான்
இந்த ஜோடிகள் இன்று பார்ப்பது
அன்று நாமும் பார்த்ததுதான்….
ஆண் : அந்தி மாலை சந்திரோதயம்
அன்றுதான் முதலிரவு
வண்ண மாலை பொன்னோவியம்
வஞ்சி நீ வரும்பொழுது
பெண் : விரல் தீண்டவும் சுகம் வேண்டவும்
திருமேனி நான் சிலிர்த்தேனே
ஆண் : இடை தேடவும் நடை போடவும்
விளையாட நான் துடித்தேனே…..
பெண் : நல்ல நாள் சோபனந்தான்
நெஞ்செல்லாம் மோகனந்தான்
பெண் : மெட்டி ஓசை சங்கீதமாய்
மெல்ல நான் நடந்து வர
பட்டுச் சேலை முந்தானையை
தொட்டு நீ தொடர்ந்து வர..
ஆண் : பசும்பாலையும் பழச்சாறையும்
பருகாமல் நான் இருந்தேனே
உன்னைப் பார்த்ததும் உடல் வேர்த்ததும்
பரிமாற நான் மறந்தேனே……
ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
ஆண் : முல்லைப் பூவும் பன்னீரையும்
மெத்தை மேல் தெளித்திருக்க
தங்கப்பாளம் பெண்ணாகியே
அங்கம்தான் ஜொலித்திருக்க
பெண் : கிள்ளிப் பார்க்கவும் அள்ளிச் சேர்க்கவும்
பள்ளிப் பாடம் நீ படித்தாயே
அன்பு பாதியும் அச்சம் பாதியும்
ரொம்ப நேரம் நீ நடித்தாயே….
பெண் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
ஆண் : இந்த நாடகம் இன்று பார்க்கையில்
அந்த நாளை ஞாபகமோ…..