Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Puthagathai mella purattu
Idhan thathuvathai chollum iruttu
Indha puthagathai mella purattu
Idhan thathuvathai chollum iruttu

Female : Munnum pinnum
Rendu pakkam
Achadichu vechirukkum
Nalla palliyarai sambavangal
Vaalibathin sangadhigal

Female : Puthagathai mella purattu
Aaaa…aaa….aaa….aaaa….aaa…..

Female : Alangaara aadai kondu
Adharkketra jaadai kondu
Ival oru thanimayil iravilae vaada
Azhagaana kannam rendu
Adaiyaala chinnam ondru
Vaangida vazhangida oruvanai theda

Female : Nalla uravu unnuruvil
Ennarugil vandha pozhudhu
Chinna idaiyil kattilarai
Mettugalai thottu ezhudhu

Female : Pudhu maeni nogaamal
Punnaaga aagaamal
Ennugindra ennangalai
Kan mozhiyil pesa vidu
Vandhirukkum manmadhanae
Ennudaiya mannavanae

Female : Puthagathai mella purattu
Idhan thathuvathai chollum iruttu

Male : Valaiyosai kettaal enna
Vizhi jaadai paarthaal enna
Mayangumo kalangumo
En manam thaanae

Male : Oru podhum aasai illai
Udhavaadhu kaadhal thollai
Ulagilae idhu varai
Thani maram naanae

Male : Kanni azhagu
Thaththi vara thaththi vara
Kandu rasippen
Kanda varaiyil podhum yena
Podhum yena etti iruppen

Male : Sugamaana sangeetham
Kettaalae sandhosham
Indha manam unnudaiya
Sondha manam illaiyadi
Konjuvadhai kenjuvadhai
Mella mella vittu vidu

Male : Puthagathil enna irukku
Oru thathuvamum illai enakku
Indha puthagathil enna irukku
Oru thathuvamum illai enakku

Male : Kannil oru mogam illai
Nenjil oru dhaagam illai
Kattazhagai thottadhillai
Kaadhal ennai chuttadhillai

Male : Puthagathil enna irukku
Aaa….aaa….aaa….aaa….aaa…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு

பெண் : இந்த புத்தகத்தை
மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு

பெண் : முன்னும் பின்னும் ரெண்டு பக்கம்
அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல
பள்ளியறை சம்பவங்கள்
வாலிபத்தின் சங்கதிகள்

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஆஆ

பெண் : அலங்கார ஆடை கொண்டு
அதற்கேற்ற ஜாடை கொண்டு
இவள் ஒரு தனிமையில்
இரவிலே வாட
அழகான கன்னம் ரெண்டு
அடையாளச் சின்னம் ஒன்று
வாங்கிட வழங்கிட
ஒருவனைத் தேட

பெண் : நல்ல உறவு உன்னுருவில்
என்னருகில் வந்த பொழுது
சின்ன இடையில் கட்டிலறை
மெட்டுகளை தொட்டு எழுது

பெண் : புது மேனி நோகாமல்
புண்ணாக ஆகாமல்
எண்ணுகின்ற எண்ணங்களை
கண்டறிய பேச விடு
வந்திருக்கும் மன்மதனே
என்னுடைய மன்னவனே

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு

ஆண் : வளையோசை கேட்டால் என்ன
விழி ஜாடை பார்த்தால் என்ன
மயங்குமோ கலங்குமோ
என் மனம் தானே
ஒரு போதும் ஆசையில்லை
உதவாது காதல் தொல்லை
உலகிலே இது வரை
தனி மரம் நானே

ஆண் : கன்னி அழகு தத்தி வர
தத்தி வர கண்டு ரசிப்பேன்
கண்ட வரையில் போதுமென
போதுமென எட்டியிருப்பேன்

ஆண் : சுகமான சங்கீதம்
கேட்டாலே சந்தோசம்
இந்த மனம் உன்னுடைய
சொந்த மனம் இல்லையடி
கொஞ்சுவதை கெஞ்சுவதை
மெல்ல மெல்ல விட்டு விடு

ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு
புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு

ஆண் : கண்ணில் ஒரு மோகமில்லை
நெஞ்சில் ஒரு தாகமில்லை
கட்டழகை தொட்டதில்லை
காதல் என்னைச் சுட்டதில்லை…

ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு
ஆஆஆஆ……ஆஆஆ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here