Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Pudhu manjal maeni chittu
Pudavaikkul Oonjal ittu
Nadanangal aadidum nayamaana azhagu
Male : Pudhu manjal maeni chittu
Pudavaikkul Oonjal ittu
Nadanangal aadidum nayamaana azhagu
Vizhiyo idhu enna rajangamo
Vizhiyo idhu enna rajangamo
Female : Idhazh thottu thendral poojai
Idai thottu kaaman poojai
Udalengum ungal poojai
Idhu thaanae ungal aasai
Female : Mogam azhaikkindrathae….yae…yae…
Naanam thadukkindrathae
Hmm hmm naanam thadukkindrathae….
Male : Pudhu manjal maeni chittu
Pudavaikkul Oonjal ittu
Female : Nadanangal aadidum nayamaana azhagu
Vizhiyo idhu enna rajangamo
Female : Neer konda megangal kudai podavum
Nilai konda pushpangal manam thoovavum
Thaer konda paravaigal shruthi meettavum
Thirumaeni valam vantha sugam ennavo
Male : Kaarkoonthal kadal kanda alaiyaagavum
Kalyaana poochendu asainthaadavum
Thear konda manisangu oli kaattavum
Nizhal konda rathi devi uru vanthatho
Nizhal konda rathi devi uru vanthatho
Female : Angam thodaamal sangam illaamal
Kannil sugangal illai
Male : Mannan varaamal maharani ennum
Penmai nalangal illai
Male : Pudhu manjal maeni chittu
Pudavaikkul Oonjal ittu
Female : Nadanangal aadidum nayamaana azhagu
Vizhiyo idhu enna rajangamo
Male : Thaen sinthum siru koodu nadamaaduthu
Sirumullai magaranthapodi thoovuthu
Maan vannam mad meedhu vilaiyaaduthu
Mazhaiyaaga tamil veenai isaipaaduthu
Female : Uravendrum sugamendrum ninaiyaathathu
Oru nenjil nilaiyaana idam theduthu
Iravendrum pagalendrum ariyaamalae
Idhamaana sugam kaana unai naaduthu
Idhamaana sugam kaana unai naaduthu
Male : Thanjam puguntha manjal nilavai
Endrum maranthathillai
Female : Anjum nadungum pinjaaga nindrum
Aasai izhanthathillai…
Male : Pudhu manjal maeni chittu
Pudavaikkul Oonjal ittu
Nadanangal aadidum nayamaana azhagu
Female : Vizhiyo idhu enna rajangamo
Both : Vizhiyo idhu enna rajangamo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
ஆண் : புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ
பெண் : இதழ் தொட்டு தென்றல் பூஜை
இடை தொட்டு காமன் பூஜை
உடலெங்கும் உங்கள் பூஜை
இது தானே உங்கள் ஆசை
பெண் : மோகம் அழைக்கின்றதே….ஏ….ஏ….
நாணம் தடுக்கின்றதே
ஹ்ம்ம் ஹ்ம்ம் நாணம் தடுக்கின்றதே……
ஆண் : புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
பெண் : நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ
பெண் : நீர் கொண்ட மேகங்கள் குடை போடவும்
நிலை கொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
தேர் கொண்ட பறவைகள் ஸ்ருதி மீட்டவும்
திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ
ஆண் : கார்க்கூந்தல் கடல் கண்ட அலையாகவும்
கல்யாண பூச்செண்டு அசைந்தாடவும்
தேர் கொண்ட மணிச்சங்கு ஒளி காட்டவும்
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
பெண் : அங்கம் தொடாமல் சங்கம் இல்லாமல்
கண்ணில் சுகங்கள் இல்லை
ஆண் : மன்னன் வராமல் மகாராணி எண்ணும்
பெண்மை நலங்கள் இல்லை…
ஆண் : புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
பெண் : நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ
ஆண் : தேன் சிந்தும் சிறுகூடு நடமாடுது
சிறுமுல்லை மகரந்தப்பொடி தூவுது
மான் வண்ணம் மடி மீது விளையாடுது
மழையாக தமிழ் வீணை இசைப் பாடுது
பெண் : உறவென்றும் சுகமென்றும் நினையாதது
ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
இரவென்றும் பகலென்றும் அறியாமலே
இதமான சுகம் காண உனை நாடுது
இதமான சுகம் காண உனை நாடுது
ஆண் : தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலவை
என்றும் மறந்ததில்லை
பெண் : அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
ஆசை இழந்ததில்லை…
ஆண் : புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
பெண் : விழியே இது என்ன ராஜாங்கமோ
இருவர் : விழியே இது என்ன ராஜாங்கமோ