Singers : S. P. Balasubrahmnayam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum

Male : Raasa leelai kaalam kaadhal yogam aagum

Female : Kalvi koodam pogaiyil
Kaadhal paadam nalladhaa
Kannin jaadai paesudhal
Thaevai illai allavaa

Male : Kaadhal indri paadamaa
Padippadhenna vaedhanai
Andhi naera kalvi thaan
Thandhadhenna saadhanai

Female : Thaenai pola paesi kedutha
Theemaiyaagum nanbanae

Male : Maeni kanda paruva dhaagam
Moodi maraikka mudiyumaa

Female : Udhaya geetham paadi ennai
Mayakka vendaam idhaya raaja

Female : Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum
Raasa leelai kaalam kaadhal yogam aagum

Male : Thooral podum neer thuli
Maaran veesum malar kanai
Maalai naera mayakkamae
Udhattil undhan punnagai

Female : Neram kaalam paarthu nee
Konja vendum ennidam
Aasai meeri ponadhaal anji nindren unnidam

Male : Kottum mazhaiyil nadukkam neenga
Idaiyai naanum pidikkavaa

Female : Idaiyai marandhu kudaiyai pidithaal
Undhan nadukkam theerumae

Male : Thazhuvum podhum nazhuvi odum
Ennam yaeno idhaya raani

Male : Raasa leelai kaalam kaadhal yogam aagum
Mounamae geethamaai thendralaaga veesum
Raasa leelai kaalam
Both : Kaadhal yogam aagum
Male : Raasa leelai kaalam
Both : Kaadhal yogam aagum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்

ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

பெண் : கல்விக்கூடம் போகையில்
காதல் பாடம் நல்லதா
கண்ணின் ஜாடை பேசுதல்
தேவை இல்லை அல்லவா

ஆண் : காதல் இன்றி பாடமா
படிப்பதென்ன வேதனை
அந்தி நேரக் கல்விதான்
தந்ததெந்தன் சாதனை

பெண் : தேனைப் போலப் பேசிக் கெடுத்த
தீமையாகும் நண்பனே

ஆண் : மேனி கண்ட பருவ தாகம்
மூடி மறைக்க முடியுமா

பெண் : உதய கீதம் பாடி என்னை
மயக்க வேண்டாம் இதய ராஜ

பெண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

ஆண் : தூரல் போடும் நீர்த் துளி
மாறன் வீசும் மலர்க் கணை
மாலை நேர மயக்கமே
உதட்டில் உந்தன் புன்னகை

பெண் : நேரம் காலம் பார்த்து நீ
கொஞ்ச வேண்டும் என்னிடம்
ஆசை மீறிப் போனதால்
அஞ்சி நின்றேன் உன்னிடம்

ஆண் : கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க
இடையை நானும் பிடிக்கவா

பெண் : இடையை மறந்து குடையைப் பிடித்தால்
உந்தன் நடுக்கம் தீருமே

ஆண் : தழுவும் போது நழுவி ஓடும்
எண்ணம் ஏனோ இதய ராணி

ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்

இருவர் : காதல் யோகம் ஆகும்
ஆண் : ராச லீலைக் காலம்
இருவர் : காதல் யோகம் ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here