Singers : Arivu and Kareeshma

Music by : Govind Vasantha

Lyrics by : Arivu

Male : Puriyadha paadhaiyil
Ariyamal pogirean
Nanaiyadha kaadhalil
Kadal aazham kangirean

Male : Mugam parkka dhan
Manam yengurean
Edhir kaatrile
Un kural kekkurean

Male : Hey railai thallum meghame
Mazhaiyai konjum kaagame
Uyirai thendum kadhal bodhame

Male : Hey avalai thedi pogirean
Kavalai theeyil vegirean,
Kanavil thondri kaanal aagirean

Female : Imai rendil vaanam
Dhuruvangal neeyum naanum
Thodarum un nizhal ange
Kan nidhamum unnai thedum

Female : Payanangal neelum
Paruvangal paadhai marum
Pirigindra pozhudhil dhan
Nam piriyangal koodum

Male : Paravai pogum paadhai poga
Siragu neelum kaalam kooda
Pozhudhu sayum vaanam
Naan kaangiren thanimaiyile

Male : Aval pogum paadhai poga
Puriyamal naanum vaada
Oru saayangaalam naan saaigiraen
Thanimaiyile

Male : Hey railai thallum meghame
Mazhaiyai konjum kaagame
Uyirai theendum kadhal bodhame

Male : Hey avalai thedi pogirean
Kavalai theeyil vegirean,
Kanavil thondri kaanal aagirean

Male : Hey railai thallum meghame
Mazhaiyai konjum kaagame
Uyirai theendum kadhal bodhame

பாடகர்கள் : அறிவு மற்றும் கரிஷ்மா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : புரியாத பாதையில்
அறியாமல் போகிறேன்
நனையாத காதலில்
கடல் ஆழம் காண்கிறேன்

ஆண் : முகம் பார்க்க தான்
மனம் ஏங்குறேன்
எதிர் காற்றிலே
உன் குரல் கேக்குறேன்

ஆண் : ஹே ரயிலை தள்ளும் மேகமே
மழையை கொஞ்சும் காகமே
உயிரை தீண்டும் காதல் போதமே

ஆண் : ஹே அவளை தேடி போகிறேன்
கவலை தீயில் வேகிறேன்
கனவில் தோன்றி கானல் ஆகிறேன்

பெண் : இமை ரெண்டில் வானம்
துருவங்கள் நீயும் நானும்
தொடரும் உன் நிழல் அங்கே
கண் நிதமும் உன்னை தேடும்

பெண் : பயணங்கள் நீளும்
பருவங்கள் பாதை மாறும்
பிரிகின்ற பொழுதில் தான்
நம் பிரியங்கள் கூடும்

ஆண் : பறவை போகும் பாதை போக
சிறகு நீளும் காலம் கூட
பொழுது சாயும் வானம்
நான் காண்கிறேன் தனிமையிலே

ஆண் : அவள் போகும் பாதை போக
புரியாமல் நானும் வாட
ஒரு சாயங்காலம் நான் சாய்கிறேன்
தனிமையிலே

ஆண் : ஹே ரயிலை தள்ளும் மேகமே
மழையை கொஞ்சும் காகமே
உயிரை தீண்டும் காதல் போதமே

ஆண் : ஹே அவளை தேடி போகிறேன்
கவலை தீயில் வேகிறேன்
கனவில் தோன்றி கானல் ஆகிறேன்

ஆண் : ஹே ரயிலை தள்ளும் மேகமே
மழையை கொஞ்சும் காகமே
உயிரை தீண்டும் காதல் போதமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here