Singer : G. Shalmali Kholgade

Music by : G. V. Prakash Kumar

Female : Enakku enakku avan
Romba pidikkum
Avanai nerunga manam
Siragadikkum
Idhayam muzhuthum
Avan peyar thudikkum
Raajaa raajaa

Female : Pakkathilae nerungi
Vetkam edupaan
Vetkam muttum pozhuthoo
Vittu parapaan
Vittu sendra piragum
Kannil irupaan raajaa raajaa

Female : Raajaa raajaa
Avan peyar thaan raajaa
Raajaa raajaa
Avan enakkae raajaa

Female : Oru puram kaadhal irukirathae
Maru puram natpum irukirathae
Madhilinil nadakkum poonaiyin nilamai
Ivalukku yeno kuduthaanae

Female : Athil vizhum pozhuthum
Idhil vizhum pozhuthum
Valaigalai parisaai kudupaanae

Female : Ivan illaamal ini enaaven
Idhayam ennai ketkirathae
Nee illaamal naan ennaaven
Badhilai sonnen muraikirathae

Male : Raajaa raajaa
Manam varudum raajaa
Raajaa raajaa
Enai thirudum raajaa

Female : Enakku enakku avan
Romba pidikkum
Avanai nerunga manam
Siragadikkum
Idhayam muzhuthum
Avan peyar thudikkum
Raajaa raajaa

Female : Pala pala varudangal
Arinthirunthum
Dhinam dhinam puthithaai
Therinthiduvaan

Female : Kavalaiyil vizhunthaal
Siripugal thelipaan
Sirithidum potho
Adi kudupaan

Female : Anaipathai polae
Ninaithidum bothae
Vethuvethupondrai
Avan tharuvaan

Female : Iravin madiyil
Thanimai nodiyil
Ivalin nizhalaai maarugiran
Udaigal urakkam manthai kulaithu
Uyiril uyiraai oorugiraan

Female : Raajaa raajaa
En udaimai raajaa
Raajaa raajaa
En muzhumai raajaa

Female : Enakku enakku avan
Romba pidikkum
Avanai nerunga manam
Siragadikkum
Idhayam muzhuthum
Avan peyar thudikkum
Raajaa raajaa

Female : Pakkathilae nerungi
Vetkam edupaan
Vetkam muttum pozhuthoo
Vittu parapaan
Vittu sendra piragum
Kannil irupaan raajaa raajaa

Female : Raajaa raajaa
Avan peyar thaan raajaa
Raajaa raajaa
Avan enakkae raajaa

பாடகி : ஷல்மலி கோல்கடி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : எனக்கு எனக்கு
அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க
மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும்
அவன் பெயர் துடிக்கும்
ராஜா ராஜா

பெண் : பக்கத்திலே நெருங்கி
வெட்கம் எடுப்பான்
வெட்கம் முட்டும் பொழுதோ
விட்டுப் பறப்பான்
விட்டுச் சென்ற பிறகும்
கண்ணில் இருப்பான்
ராஜா ராஜா

பெண் : ராஜா ராஜா
அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா
அவன் எனக்கே ராஜா

பெண் : ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே
மதிலினில் நடக்கும் பூனையின் நிலைமை
இவளுக்கு ஏனோ கொடுத்தானே
அதில் விழும் பொழுதும்
இதில் விழும் பொழுதும்
வலிகளை பரிசாய் கொடுப்பானே

பெண் : இவனில்லாமல் நீ என்னாவாய்
இதயம் என்னைக் கேட்கிறதே
நீயில்லாமல் நான் என்னாவேன்
பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே

பெண் : ராஜா ராஜா
மனம் வருடும் ராஜா
ராஜா ராஜா
எனைத் திருடும் ராஜா

பெண் : எனக்கு எனக்கு அவன்
ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க
மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும்
அவன் பெயர் துடிக்கும்
ராஜா… ராஜா….

பெண் : பல பல வருடங்கள்
அறிந்திருந்தும்
தினம் தினம்
புதிதாய் தெரிந்திடுவான்
கவலையில் விழுந்தால்
சிரிப்புகள் தெளிப்பான்
சிரித்திடும் போதோ
அடி கொடுப்பான்

பெண் : அணைப்பதை போலே
நினைத்திடும் போதே
வெதுவெதுப்பொன்றை
அவன் தருவான்

பெண் : இரவின் மடியில்
தனிமை நொடியில்
இவளின் நிழலாய் மாறுகிறான்
உடைகள் உறக்கம்
மனதைக் குலைத்து
உயிரில் உயிராய் ஊறுகிறான்

பெண் : ராஜா ராஜா
என் உடைமை ராஜா
ராஜா ராஜா
என் முழுமை ராஜா…

பெண் : எனக்கு எனக்கு அவன்
ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க
மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும்
அவன் பெயர் துடிக்கும்
ராஜா ராஜா

பெண் : பக்கத்திலே நெருங்கி
வெட்கம் எடுப்பான்
வெட்கம் முட்டும் பொழுதோ
விட்டுப் பறப்பான்
விட்டுச் சென்ற பிறகும்
கண்ணில் இருப்பான்
ராஜா ராஜா

பெண் : ராஜா ராஜா
அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா
அவன் எனக்கே ராஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here