Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran
Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran

Female : Thambi pappa intha veettin ilaiyakumaran
Alli thallaatta naalu pengal
Udan pirappaagum

Chorus : Thambi pappa intha veettin ilaiyakumaran
Alli thallaatta naalu pengal
Udan pirappaagum

Female : Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran

Female : Sanginaal paal koduththaal
Santhanavaai nogumendru
Sanginaal paal koduththaal
Santhanavaai nogumendru
Thangathaal sangi seithu
Tharuvaaraam thanthaiyadi

Female : Pachai magan paduthuranga
Pavala mani thottiladi
Mannavan kannuranga
Maanikka thottiladi

Chorus : Maanikka thottil raththinapattu
Thambikku kondaattam
Maambazhachittu kannaththai thottu
Engalin kondaattam

Female : Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran

Female : Archanrukku geedhai sonnaan
Annalavan kannanadi
Archanrukku geedhai sonnaan
Annalavan kannanadi
Thanthaiyidam manthiraththai
Saattriyavan kandhanadi

Female : Ellorukkum kalvi thanthaan
Sivakaami selvanadi
En maganum avar polae
Valarnthu varum thalaivanadi

Chorus : Maanikka thottil raththinapattu
Thambikku kondaattam
Maambazhachittu kannaththai thottu
Engalin kondaattam

Female : Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran

Female : Thanthaikku thambi tharum
Thangamani kadigaaram
Thanthaikku thambi tharum
Thangamani kadigaaram
Annaikku avan tharuvaan
Aaru poun muththaaram

Female : Akkaavin thirumanaththil
Ainthu vandi seervarisai
Ammaadi enna solvaen
Aasai magan paer varisai

Chorus : Maanikka thottil raththinapattu
Thambikku kondaattam
Maambazhachittu kannaththai thottu
Engalin kondaattam

Chorus : Thambi pappa intha veettin ilaiyakumaran
Alli thallaatta naalu pengal
Udan pirappaagum

Female : Aa…aa…aa….aa….aa….aa….aa….
Aa…aa…aa….aa….aa….aa….aa….

Chorus : Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran
Rajaththi pettredupaal rajakumaran
En rajavukku avan oru nandhakumaran

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்

பெண் : தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள்
உடன் பிறப்பாகும்………

குழு : தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள்
உடன் பிறப்பாகும்………

பெண் : ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்

பெண் : சங்கினால் பால் கொடுத்தால்
சந்தனவாய் நோகுமென்று
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து
தருவாராம் தந்தையடி

பெண் : பச்சை மகன் படுத்துறங்க
பவள மணித்தொட்டிலடி
மன்னனவன் கண்ணுறங்க
மாணிக்கத் தொட்டிலடி

குழு : மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு
தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு
எங்களின் கொண்டாட்டம்…..

பெண் : ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்

பெண் : அர்ச்சுனர்க்கு கீதை சொன்னான்
அண்ணலவன் கண்ணனடி
அர்ச்சுனர்க்கு கீதை சொன்னான்
அண்ணலவன் கண்ணனடி
தந்தையிடம் மந்திரத்தை
சாற்றியவன் கந்தனடி

பெண் : எல்லோர்க்கும் கல்வி தந்தான்
சிவகாமி செல்வனடி
என் மகனும் அவர் போலே
வளர்ந்து வரும் தலைவனடி

குழு : மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு
தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு
எங்களின் கொண்டாட்டம்…..

பெண் : ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்

பெண் : தந்தைக்குத் தம்பி தரும்
தங்கமணிக் கடிகாரம்
தந்தைக்குத் தம்பி தரும்
தங்கமணிக் கடிகாரம்
அன்னைக்கு அவன் தருவான்
ஆறு பவுன் முத்தாரம்

பெண் : அக்காவின் திருமணத்தில்
ஐந்து வண்டி சீர்வரிசை
அம்மாடி என்ன சொல்வேன்
ஆசை மகன் பேர் வரிசை

குழு : மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு
தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு
எங்களின் கொண்டாட்டம்…..

குழு : தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள்
உடன் பிறப்பாகும்………

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….

குழு : ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here