Singer : Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Kalvargalae kayavargalae vaarungal
Intha kanniyamikka manithargalai paarungal

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega
Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

Female : Yaezhettu maadi eppothum jolly
Ellorumae oru jaathi
Neega ellorumae oru jaathi

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

Female : Vari katta venuminnu varugindra aalugalai
Sari katti vittavanga undu
Thannai vattamidum aal meethu santhegam thondrivittaal
Thittamittu theerppathuvum undu

Female : Adhu yaarunnu paakkureenga neenga
Aiyya neega onnum appadi illeenga

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

Female : Kaasu athu pesum silar kaigalil adhu oru thoosu
Veesu alli veesu adhil veeraathi veeraargalum lesu
Ennanga yosanau adikkuthu vaasanai
Inimae irukkuthu saadhanai

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

Female : Kootunga perukkunga kummaalam podunga
Kuviyunga kaasu panam kodi
Adhu kodi varai saernthuvittaal
Koyilukkullae irukkum
Eswaranum ungalukku jodi

Female : Aiyaa nimmathiyae vaazhkkaiyin kanakku
Adhu nermaiyudan vaazhvathilae irukku

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

Female : Yaezhettu maadi eppothum jolly
Ellorumae oru jaathi
Neega ellorumae oru jaathi

Female : Rajathi rajakkal vaanga
Intha naattilae nallavanga neega

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கள்வர்களே கயவர்களே வாருங்கள்
இந்த கண்ணியமிக்க மனிதர்களை பாருங்கள்…….

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க
ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க

பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி
எல்லோருமே ஒரு ஜாதி
நீங்க எல்லோருமே ஒரு ஜாதி…..

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க

பெண் : வரி கட்ட வேணுமின்னு வருகின்ற ஆளுகளை
சரி கட்டி விட்டவங்க உண்டு
தன்னை வட்டமிடும் ஆள் மீது சந்தேகம் தோன்றிவிட்டால்
திட்டமிட்டுத் தீர்ப்பதுவும் உண்டு

பெண் : அது யாருன்னு பாக்குறீங்க நீங்க
ஐயா நீங்க ஒண்ணும் அப்படி இல்லீங்க

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க

பெண் : காசு அது பேசும் சிலர் கைகளில் அது ஒரு தூசு
வீசு அள்ளி வீசு அதில் வீராதி வீரர்களும் லேசு
என்னங்க யோசனை அடிக்குது வாசனை
இனிமே இருக்குது சாதனை………….

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க

பெண் : கூட்டுங்க பெருக்குங்க கும்மாளம் போடுங்க
குவியுங்க காசு பணம் கோடி
அது கோடி வரை சேர்ந்துவிட்டால்
கோயிலுக்குள்ளே இருக்கும்
ஈஸ்வரனும் உங்களுக்கு ஜோடி

பெண் : ஐயா நிம்மதியே வாழ்க்கையின் கணக்கு
அது நேர்மையுடன் வாழ்வதிலே இருக்கு…

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க

பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி
எல்லோருமே ஒரு ஜாதி
நீங்க எல்லோருமே ஒரு ஜாதி…..

பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க
இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here