Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyricist : Vaali

Male : Roja thegamae ilang kadhal megamae
Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Female : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Female : Kodai naalil aasai vaigai
Vellam paaikkirathae
Aaadai Moodiya thaazham poovudal
Theeyaai kaaigirathae

Male : Aadum thaamarai annak kodiyidai
Kaiyil thavazhattumae
Yaela poonguzhal entha maarbinil
Kolam varaiyattumae

Female : Naanthaanae….ae….
Naanthaanae poongothai nee meettum pon veenai
Jaadai paarvaigal nenjil medaigal poduthae

Male : Roja thegamae ilang kadhal megamae
Female : Un nenjam naan vaazhum kadhal maaligai
Naanthaanae un kannil aadum dhevathai

Male : Roja thegamae ilang kadhal megamae….

Chorus : ………………

Male : Minnum maadhulai kanna thottaththil
Muththam vithaiththidavaa
Muththa porvaiyil meththai naadagam
Niththam aadidavaa vaa vaa

Female : Yaengum bhoomiyai kettaa mamazhai
Mannil pozhigirathu
Thoongum poovinai kettaa vandugal
Thaenai edukkirathu

Male : Yaedhaetho…oo…
Yaedhaetho mogangal undaagum nerangal
Thennag keettrugal thendral kaattrinai modhuthae

Female : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Both : Roja thegamae ilang kadhal megamae…..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை

பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை

பெண் : கோடை நாளில் ஆசை வைகை
வெள்ளம் பாய்கிறதே
ஆடை மூடிய தாழம் பூவுடல்
தீயாய் காய்கிறதே

ஆண் : ஆடும் தாமரை அன்னக் கொடியிடை
கையில் தவழட்டுமே
ஏலப் பூங்குழல் எந்தன் மார்பினில்
கோலம் வரையட்டுமே

பெண் : நான்தானே……ஏ…….
நான்தானே பூங்கோதை நீ மீட்டும் பொன் வீணை
ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே

ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
பெண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை

ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே….

குழு : …………………………

ஆண் : மின்னும் மாதுளை கன்னத் தோட்டத்தில்
முத்தம் விதைத்திடவா
முத்தப் போர்வையில் மெத்தை நாடகம்
நித்தம் ஆடிடவா வாவா

பெண் : ஏங்கும் பூமியை கேட்டா மாமழை
மண்ணில் பொழிகிறது
தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள்
தேனை எடுக்கிறது

ஆண் : ஏதேதோ……..ஓ……..
ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள்
தென்னங் கீற்றுகள் தென்றல் காற்றினை மோதுதே

பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ஆண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை

இருவர் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here