Singer : Bombay Jayashri

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Vairamuthu

Female : Rojave tamil pesu
Chediyil pootha natchathiramae
Sirippil ezhuthiya sithiramae
Chinnanjiru kaalam thaan
Nee vaazhvathu – aanal
Kaatril oru peru vaazhvu
Nee eluthi povadhu
Enganam unnaal aanadhu?

Female : Rojave tamil pesu
Rojave tamil pesu

Female : Vaan koduthaalam
Vinmeen pothum
Mann koduthaalum
Malar ondru pothum
Kadal koduthaalum
Meen ondru pothum

Female : Periyathu ellaam
Perum porul illai
Siriyathu ellaam
Siru porul illai
Payangalai poruthae
Porulgalin ellai

Female : Rojave tamil pesu
Rojave tamil pesu

Female : Veyilukku thannai
Virundhu vaithaalum
Muyalukku dhaagam
Theerthu vaithaalum
Panithuli vaazhvu
Pooranamaagum

Female : Thodangiya vaazhvai
Azhagu seidhaalum
Adangiya vaazhvai
Amaidhi seidhaalum
Malargalin vaazhvu
Pooranamaagum

Female : Rojave tamil pesu
Rojave tamil pesu

Female : Chediyil pootha natchathiramae
Sirippil ezhuthiya sithiramae
Chinnanjiru kaalam thaan
Nee vaazhvathu- aanal
Kaatril oru peru vaazhvu
Nee eluthi povadhu
Enganam unnaal aanadhu?

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : ரோஜாவே தமிழ் பேசு
செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது – ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப் போவது
எங்ஙனம் உன்னால் ஆனது?

பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு

பெண் : வான் கொடுத்தாலும்
விண்மீன் போதும்
மண் கொடுத்தாலும்
மலரொன்று போதும்
கடல் கொடுத்தாலும்
மீன்ஒன்று போதும்

பெண் : பெரியது எல்லாம்
பெரும்பொருள் இல்லை
சிறியது எல்லாம்
சிறுபொருள் இல்லை
பயன்களைப் பொறுத்தே
பொருள்களின் எல்லை

பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு

பெண் : வெயிலுக்குத் தன்னை
விருந்து வைத்தாலும்
முயலுக்கு தாகம்
தீர்த்து வைத்தாலும்
பனித்துளி வாழ்வு
பூரணமாகும்

பெண் : தொடங்கிய வாழ்வை
அழகு செய்தாலும்
அடங்கிய வாழ்வை
அமைதி செய்தாலும்
மலர்களின் வாழ்வு
பூரணமாகும்

பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு

பெண் : செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது – ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப் போவது
எங்ஙனம் உன்னால் ஆனது?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here