Singer : K

Music by : JD

Lyrics by : Veronica

Male : En saambal nira kanavugalukkul
Nee evaaru ut-pugundhaai?
Ethanai murai kalaippinum
Oyaadhu marana valaigal pinni kondirukum
Silandhiyin kaathirupil
Sikki konda iraiyin parithavippai kandu
Nee nadunga..
Naano adhan melliya valaiyin meedhu
Padarndhodum nerthiyaana
Vadivangalukkul en aanmaavai pinaithu konden

Male : En thadaagathin oram
Thaagam theerka varubavargalai
Mella ul vaangi kolgiren
Enjuvadho endhan nesangalai ninaivu paduthum
Neer kumizhigalae
Udaindhu vidum ena therindhum
Meendum meendum uruvaagum
Meendum meendum uruvaagum
Meendum meendum uruvaagum

Male : Idho en saambal nira kanavugalakkul
Udhirangal uraiya
Sadhaa vaarthaigal padaithu kondirukiren
Pakkangal thorum vazhindhodum ranam
Anaithum aayatham
Mella thirai vilaga
Meendum oru kadhai pirakkum

பாடகர் : கே

இசை அமைப்பாளர் : ஜேடி

பாடல் ஆசிரியர் : வேரோனிகா

ஆண் : என் சாம்பல் நிற கனவுகளுக்குள்
நீ எவ்வாறு உட்புகுந்தாய்?
எத்தனை முறை கலைப்பினும்
ஓயாது மரண வலைகள் பின்னிக் கொண்டிருக்கும்
சிலந்தியின் காத்திருப்பில்
சிக்கி கொண்ட இரையின் பரிதவிப்பை கண்டு
நீ நடுங்க..
நானோ அதன் மெல்லிய வலையின் மீது
படர்ந்து ஓடும் நேர்த்தியான வடிவங்களுக்குள்
என் ஆன்மாவைப் பிணைத்துக் கொண்டேன்.

ஆண் : என் தடாகத்தின் ஓரம்
தாகம் தீர்க்க வருபவர்களை
மெல்ல உள் வாங்கி கொள்கிறேன்.
எஞ்சுவதோ எந்தன் நெசங்களை நினைவு படுத்தும்
நீர் குமிழிகளே .
உடைந்து விடும் என தெரிந்தும்
மீண்டும் மீண்டும் உருவாகும்.
மீண்டும் மீண்டும் உருவாகும்
மீண்டும் மீண்டும் உருவாகும்.

ஆண் : இதோ என் சாம்பல் நிற கனவுக்குள்
உதிரங்கள் உறைய
சதா வார்த்தைகள் படைத்து கொண்டிருக்கிறேன்.
பக்கங்கள் தோறும் வழிந்தோடும் ரணம்
அனைத்தும் ஆயத்தம்
மெல்ல திரை விலக
மீண்டும் ஒரு கதை பிறக்கும்.


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here