Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Sakka podu podu raajaa

Male : Daei daei
Ennadaa paattula pesa aarambichittae

Male : Nee sakka podu podu raajaa
Un kaattula mazhai peiyudhu

Male : Aamaa mazhai peiyudhu
Nee vandhu koda pidi yendaang…

Male : Sakka podu podu raajaa
Un kaattula mazhai peiyudhu
Satta padi thottup pesu
Nee bayandhaa ennaavadhu
Malliya poo maeniyadaa
Naan medhuvaa thoduvendaa

Male : Aa idhula onnum kuraichal illa

Male : Sakka podu podu raajaa
Un kaattula mazhai peiyudhu
Satta padi thottup pesu
Nee bayandhaa ennaavadhu

Male : Nalla samayam idhai vittu vidaadhae
Naalum therindha nee nazhuva vidaadhae

Male : Enna enna ennadaa nalla samayam

Male : Velli nilaa kaayudhu
Vaadai kaattru veesudhu
Pulli mayil ullirukkaa
Alli alli kai irandil yendhi kolladaa

Male : Sakka podu podu raajaa
Un kaattula mazhai peiyudhu
Satta padi thottup pesu
Nee bayandhaa ennaavadhu

Male : Aarambam konjam achathilae
Aanandham pinbu pakkatthilae
Kaenikkul undaana thanneerai endraenum
Vellam kondodumo

Male : Aamaandaa
Ippadi pazhamozhiya pesiyae
Pozhudha kazhichikittiru

Male : Podaa po pazham panjaangam nee
Vaadaadho un semmaangani
Kalyaanam aayaachi pondaatti vandhaachi
Innum verennadaa ho

Male : Sakka podu podu raajaa
Un kaattula mazhai peiyudhu
Satta padi thottup pesu
Nee bayandhaa ennaavadhu

Male : Thaanaa kaniyara kaniya
Yendaa thadiyaala adichi kaniya vaikkanum
Daei enna nee reikkaadhae

Male : Poraattam ila nenjathilae
Undaana indha nerathilae
Unnaalae naan patta thollaigal podhaadho
Etti ponaal enna

Male : Ennaiyaadaa ettip poga cholra

Male : Unnodu naan undaanavan
Ullathin kural endraanavan
Naanindri nee illai nee indri naan illai
Pirikka mudiyaadhadaa

Male : Podhum podaa neeyum vaadaa
Vamba valakkaadhae vaayai kilaraadhae
Aathiram moottaadhae adakka ninaikkaadhae
Adippendaa …. Nadakkaadhu
Udhaippendaa ….Mudiyaadhu

Male : Yendaa mudiyaadhu
Male : Katti pudippendaa
Male : Kazhutha neripendaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சக்க போடு போடு ராஜா

ஆண் : டேய் டேய்
என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட

ஆண் : நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது

ஆண் : ஆமா மழை பெய்யுது
நீ வந்து கொடை பிடி ஏண்டாங்…

ஆண் : சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா

ஆண் : ஆ இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல

ஆண் : மல்லியப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா
நான் பஞ்சணையில் கொஞ்சுவேன்
நீ போக போக பாரேன்டா

ஆண் : …………………………..

ஆண் : சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

ஆண் : நல்ல சமயம் இதை விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே

ஆண் : என்ன என்ன என்னடா நல்ல சமயம்

ஆண் : வெள்ளி நிலா காயுது
வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளிக் கை இரண்டில்
ஏந்திக் கொள்ளடா

ஆண் : சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

ஆண் : ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே
ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள் உண்டான தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டோடுமோ

ஆண் : ஆமான்டா
இப்படி பழமொழிய பேசியே
பொழுத கழிச்சிகிட்டிரு

ஆண் : போடா போ பழம் பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி பொண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறென்னடா ஹோ

ஆண் : சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

ஆண் : தானா கனியற கனிய
ஏன்டா தடியால அடிச்சி கனிய வைக்கணும்
டேய் என்ன நீ மொறைக்காதே

ஆண் : போராட்டம் இள நெஞ்சத்திலே
உண்டான இந்த நேரத்திலே
உன்னாலே நான் பட்ட தொல்லைகள் போதாதோ
எட்டிப் போனால் என்ன

ஆண் : என்னையாடா எட்டி போகச் சொல்ற

ஆண் : உன்னோடு நான் உண்டானவன்
உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை
பிரிக்க முடியாதடா

ஆண் : போதும் போடா நீயும் வாடா
வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே அடக்க நினைக்காதே
அடிப்பேன்டா….. நடக்காது
உதைப்பேன்டா…… முடியாது

ஆண் : ஏன்டா முடியாது
ஆண் : கட்டிப் புடிப்பேன்டா
ஆண் : கழுத்த நெறிப்பேன்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here