Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku
Samuthaaya veedhiyilae naan sigappu vilakku
Indru kadhaiyaaga vilaipogum kadai sarakku
Enna solla yaedhu solla
Enna solla yaedhu solla
Vetkkakedu veliyil solla

Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku

Female : Manjalodum manamaalaiyodum
Manaiviyendru naan sendra neram
Nenjil ninaithaen pudhu veedu endru
Nenjil ninaithaen pudhu veedu endru
Neril kandaen podhu veedu endru

Female : Kelikku porulaanaen
Avan kelvikku idamaanaan
Enna solla yaedhu solla
Vetkkakkedu veliyil solla

Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku

Female : Vaazhvu thodangum mudhal naalin iravu
Vasanthamalla naan paarththa uravu
Muthatham sintha edhirpaarththu nindraen
Muthatham sintha edhirpaarththu nindraen
Madhuvai eduththaan idhazhoram vaarththaan
Idhzhoram vaarththaan

Female : Mayakkaththil aazhththi vittaan
Manam pola aatti vaithathaan
Enna solla yaedhu solla
Vetkkakkedu veliyil solla

Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku

Female : Ennai eduthaen virunthaaga vaithaen
Virunthai eduthaan vilaikku koduththaan
Kattiya thaali oruvanukendraen
Kattiya thaali oruvanukendraen
Kattil paavai varupavarkendraan

Female : Naalum izhanthu vittaen
Indru nadai pinam aagi vittaen
Nadai pinam aagi vittaen
Enna solla yaedhu solla
Vetkkakkedu veliyil solla

Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு
சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு
இன்று கதையாக விலைபோகும் கடை சரக்கு
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
வெட்கக்கேடு வெளியில் சொல்ல

பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு

பெண் : மஞ்சளோடும் மணமாலையோடும்
மனைவியென்று நான் சென்ற நேரம்
நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று
நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று
நேரில் கண்டேன் பொது வீடு என்று

பெண் : கேலிக்கு பொருளானேன்
அவன் கேள்விக்கு இடமானான்
என்ன சொல்ல ஏது சொல்ல
வெட்கக்கேடு வெளியில் சொல்ல…..

பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு

பெண் : வாழ்வு தொடங்கும் முதல் நாளின் இரவு
வசந்தமல்ல நான் பார்த்த உறவு
முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன்
முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன்
மதுவை எடுத்தான் இதழோரம் வார்த்தான்
இதழோரம் வார்த்தான்

பெண் : மயக்கத்தில் ஆழ்த்தி விட்டான்
மனம் போல ஆட்டி வைத்தான்
என்ன சொல்ல ஏது சொல்ல
வெட்கக்கேடு வெளியில் சொல்ல……

பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு

பெண் : என்னை எடுத்தேன் விருந்தாக வைத்தேன்
விருந்தை எடுத்தான் விலைக்கு கொடுத்தான்
கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன்
கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன்
கட்டில் பாவை வருபவர்க்கென்றான்

பெண் : நாலும் இழந்து விட்டேன்
இன்று நடைப் பிணம் ஆகி விட்டேன்
நடைப் பிணம் ஆகி விட்டேன்
என்ன சொல்ல ஏது சொல்ல
வெட்கக்கேடு வெளியில் சொல்ல

பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here