Singer : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Paa shaa nee papa papapa mapaaga
Gagaga mamama papa paapaapa paapaa

Male : Sangetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu
Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu
Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Male : Sangetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Female : Raagamengae antha raagamengae
Thaalamingae inba thaalamingae
Raagamengae antha raagamengae
Thaalamingae inba thaalamingae

Female : Thedugiraen engum thedugiraen
Vaadugiraen adhanaal paadugiraen
Thedugiraen engum thedugiraen
Vaadugiraen adhanaal paadugiraen

Female : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Male : Oonjalilae kangal asaivathenna
Female : Ooraththilae kadhal thavippathenna
Male : Oonjalilae kangal asaivathenna
Female : Ooraththilae kadhal thavippathenna

Male : Thaen malargal ingae nanaivathenna
Female : Thaeniyae engo maraivathenna
Both : Thaen malargal ingae nanaivathenna
Female : Thaeniyae engo maraivathenna

Female : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

Male : Ramanukkae seedhai ramanukkae
Female : Kamanukkae rathiyum kamanukkae
Male : Ramanukkae seedhai ramanukkae
Female : Kamanukkae rathiyum kamanukkae

Female : En manamae yaengum penn manamae
Mannanidam solvaai sammathamae
En manamae yaengum penn
Both : Mannanidam solvaai sammathamae

Both : Kaiyodu kaiserum uravenpathenna
Kannodu kann searnthu uruvaanathu

Both : Sangeetham eppothum sugamaanathu
Thaalam raagam serum kalaiyaanathu
Thaalam raagam serum kalaiyaanathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பா ஸா நீ பாபா பாபாப மபாக
ககக மமம பப பாபாப பாபா

ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

பெண் : ராகமெங்கே அந்த ராகமெங்கே
தாளமிங்கே இன்பத் தாளமிங்கே
ராகமெங்கே அந்த ராகமெங்கே
தாளமிங்கே இன்பத் தாளமிங்கே

பெண் : தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன்
வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்
தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன்
வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்

பெண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன
பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன
ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன
பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன

ஆண் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன
பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன
இருவர் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன
பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன

ஆண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது

ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே
பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே
ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே
பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே

பெண் : என் மனமே ஏங்கும் பெண் மனமே
மன்னனிடம் சொல்வாய் சம்மதமே
என் மனமே ஏங்கும் பெண் மனமே
இருவர் : மன்னனிடம் சொல்வாய் சம்மதமே

இருவர் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன
கண்ணோடு கண் சேர்ந்து உருவானது

இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
தாளம் ராகம் சேரும் கலையானது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here