Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Kannadasan

Male : Sangeetham raagangal illaamalaa
Santhosham samshaaram illaamalaa
Sangeetham raagangal illaamalaa
Santhosham samshaaram illaamalaa

Male : Kadhal kadhal mogam mogam inbam
Punniyamaa purushaarthamaa

Male : Seethaiyidam raman kaanaathathaa
Deviyarin vaazhvil illaathathaa
Rathaiyidam kannan naadaathathaa
Rasaleelai enna koodaathathaa

Male : Ulagil oru paagam uravu kollum thaagam
Punniyamaa purushaarthamaa

Male : Sangeetham raagangal illaamalaa
Santhosham samshaaram illaamalaa

Female : Ennazhagai naanaethaan solvathaa
Yaekkam ennavendru naan solvathaa
Oviyathu penmai uyir kollumaa
Uravu illaa penmai thuyil kollumaa

Female : Kootturavu inbam kettu perum thunbam
Punniyamaa purushaarthamaa

Male : Aan mathu ingae anal kondathu
Antharangam ellaam yaar solvathu
Female : Penn manathu ingae thanal kondathu
Thaen siritha naanam thadai kondathu
Male : Neenthi varum vellam saanthi perum ullam
Punniyamaa purushaarthamaa

Male : Sangeetham raagangal illaamalaa
Santhosham samshaaram illaamalaa
Kadhal mogam inbam
Punniyamaa purushaarthamaa

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

ஆண் : காதல் காதல் மோகம் மோகம் இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் : சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா

ஆண் : உலகில் ஒரு பாகம் உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

பெண் : என்னழகை நானேதான் சொல்வதா
ஏக்கம் என்னவென்று நான் சொல்வதா
ஓவியத்து பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லா பெண்மை துயில் கொள்ளுமா

பெண் : கூட்டுறவு இன்பம் கேட்டுப் பெறும் துன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

பெண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல் மோகம் இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் : ஆண் மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது
பெண் : பெண் மனது இங்கே தனல் கொண்டது
தேன் சிரித்த நாணம் தடைக் கொண்டது
ஆண் : நீந்தி வரும் வெள்ளம் சாந்தி பெறும் உள்ளம்
புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல் மோகம் இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here