Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Sandhana kaatril sundhara pookkal
Aadudhu naatiyamae
Venpani thoova punnagaiyodu
Poothathu pooviname oo poomagal madi melae

Male : Sandhana kaatril sundhara pookkal
Aadudhu naatiyamae
Venpani thoova punnagaiyodu
Poothathu pooviname oo poomagal madi melae

Male : Vaanathu melae megha paravai
Oorvalam pogindrathu
Varugindra megham sooriyan mugathil
Ooviyam varaigindrathu

Male : Moongil ilaikkul thoongum panikku
Thookkam kalaigirathu
Oo moolai mudukkil oolai idukkil
Sooriyan nuzhaikkirathu
Mannilellaam oo ponnozhiyae oo…

Male : Sandhana kaatril sundhara pookkal
Aadudhu naatiyamae
Venpani thoova punnagaiyodu
Poothathu pooviname oo poomagal madi melae

Chorus : …………………….

Male : Aayiram kodi aasaigal sumandhu
Naan ingae vandhenae
Vaavendru ennai pookalin koottam
Vaazhthida kandenae

Male : Naattai uyarthi naamum uyara
Sevaigal seivomae
Oo naalaiya pozhuthu namakkena vidiyum
Nambikkai kolvomae
Pillaigalae oo mullaigalae oo

Male : Sandhana kaatril sundhara pookkal
Aadudhu naatiyamae
Venpani thoova punnagaiyodu
Poothathu pooviname oo poomagal madi melae
Sandhana kaatril sundhara pookkal
Aadudhu naatiyamae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

ஆண் : வானத்து மேலே மேகப் பறவை
ஊர்வலம் போகின்றது
வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்
ஓவியம் வரைகின்றது

ஆண் : மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு
தூக்கம் கலைகிறது
ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில்
சூரியன் நுழைகிறது
மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

குழு : ……………………………..

ஆண் : ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து
நான் இங்கே வந்தேனே
வாவென்று என்னை பூக்களின் கூட்டம்
வாழ்த்திடக் கண்டேனே

ஆண் : நாட்டை உயர்த்தி நாமும் உயர
சேவைகள் செய்வோமே
ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும்
நம்பிக்கை கொள்வோமே
பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here