Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Thanneerai neruppu endru
Santhegam kondavargal
Kanneerai kaanaamal
Oointhathum illai
Avargal kanmoodi thalaiyanaiyil
Saainthathum illai

Male : Santhega kodu adhu santhosa kedu
Santhega kodu adhu santhosa kedu
Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu
Thunbam valarnthidum kaadu\

Male : Santhega kodu adhu santhosa kedu

Male : Paththiniyai nampa vaikka
Palakaalam paadupattaen
Saththiyamae puriyavillai avalukku
Adhu kaththiyaachchu uthamaiyin uyirukku
Adhu kaththiyaachchu uthamaiyin uyirukku

Male : Santhega kodu adhu santhosa kedu
Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu
Thunbam valarnthidum kaadu

Male : Santhega kodu adhu santhosa kedu

Male : Vaazhkkaiyilae ondrupattaal
Vazhi nedga kooda vanthaal
Vaarthaiyilae kondru vittaal ennaiyae
Than vaayaalae keduththu kondaal thannaiyae
Than vaayaalae keduththu kondaal thannaiyae

Male : Santhega kodu adhu santhosa kedu

Male : Unmaiyilae vaazhnthavanai
Oru manathaai nindravanai
Unmaiyilae vaazhnthavanai
Oru manathaai nindravanai

Male : Oor sirikka vaiththathadi santhegam
Ini unakku kooda sonthamillai en thegam
Ini unakku kooda sonthamillai en thegam

Male : Santhega kodu adhu santhosa kedu
Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu
Thunbam valarnthidum kaadu

Male : Santhega kodu adhu santhosa kedu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தண்ணீரை நெருப்பு என்று
சந்தேகம் கொண்டவர்கள்
கண்ணீரைக் காணாமல்
ஓய்ந்ததும் இல்லை
அவர்கள் கண்மூடித் தலையணையில்
சாய்ந்ததும் இல்லை

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு
இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு
துன்பம் வளர்ந்திடும் காடு………

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு……

ஆண் : பத்தினியை நம்ப வைக்கப்
பலகாலம் பாடுப்பட்டேன்
சத்தியமே புரியவில்லை அவளுக்கு
அது கத்தியாச்சு உத்தமியின் உயிருக்கு…..
அது கத்தியாச்சு உத்தமியின் உயிருக்கு…..

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு
இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு
துன்பம் வளர்ந்திடும் காடு………

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு……

ஆண் : வாழ்க்கையிலே ஒன்றுபட்டாள்
வழி நெடுக கூட வந்தாள்
வார்த்தையிலே கொன்று விட்டாள் என்னையே
தன் வாயாலே கெடுத்துக் கொண்டாள் தன்னையே
தன் வாயாலே கெடுத்துக் கொண்டாள் தன்னையே

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு……

ஆண் : உண்மையிலே வாழ்ந்தவனை
ஒரு மனதாய் நின்றவனை
உண்மையிலே வாழ்ந்தவனை
ஒரு மனதாய் நின்றவனை

ஆண் : ஊர் சிரிக்க வைத்ததடி சந்தேகம்
இனி உனக்குக் கூடச் சொந்தமில்லை என் தேகம்
இனி உனக்குக் கூடச் சொந்தமில்லை என் தேகம்

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு
இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு
துன்பம் வளர்ந்திடும் காடு………

ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here