Singers : S. C. Krishnan and Soolamangalam Rajalakshmi

Music by : R. Sudharsanam

Lyrics by : Kavi Rajagopal

Male : Santhegam ennum oru sarakku
Adhu pengal manasilae thaan irukku
Munthirunthavanga moolai nirainjavanga
Mudivaai pottu vecha kanakku
Munthirunthavanga moolai nirainjavanga
Mudivaai pottu vecha kanakku
Santhegam ennum oru sarakku
Adhu pengal manasilae thaan irukku

Male : Velaikku ponavanga veedu vandhu sera
Konja neram thavarinaal santhegam
Veettukku vandhadhum aluthu salithu poyi
Neetti nimirndhutta santhegam…
Veettukku vandhadhum aluthu salithu poyi
Neetti nimirndhutta santhegam… santhegam…santhegam

Female : Santhegam ennum oru sarakku adhu
Aangal manasilae thaan irukku
Munthirunthavanga moolai nirainjavanga
Mudivaai pottu vecha kanakku
Santhegam ennum oru sarakku adhu
Aangal manasilae thaan irukku

Female : Seevi mudichikittu naalunkizhamaiyilae
Singaaram panninaa santhegam
Seevi mudichikittu naalunkizhamaiyilae
Singaaram panninaa santhegam
Siricha mugangatti nadanthu thirinjitta
Porakkudhu aambalaikku santhegam
Santhegam santhegam

Female : Santhegam ennum oru sarakku adhu
Aangal manasilae thaan rukku

Male : Panamaarathadiyil utkarndhu irukkiravan
Paalai kudichaalum santhegam
Pasum paalai kudichaalum santhegam
Panamaarathadiyil utkarndhu irukkiravan
Paalai kudichaalum santhegam
Pasum paalai kudichaalum santhegam

Female : Panathilae midhakkira ulagathilae

Endha pakkathula paarthaalum santhegam
Male : Ahaaa…Female : Santhegam
Male : Ohoo…Female : Santhegam

Both : Santhegam ennum oru sarakku
Adhu sagala edathileyum irukku

Male : Polladhadhu indha santhegan
Uyirai kollaamalae kollum noiyaagaum ..aa…
Polladhadhu indha santhegan
Uyirai kollaamalae kollum noiyaagaum
Idhai nalla purinjukittu
Idhai nalla purinjukittu
Ellorum vaazhkaiyai nadathanum
Adhuvae muraiyaagaum
Nambikkaiyae adukku marunthaagum
Naan aaraindhu sollum arivurai aagum

Female : Santhegam…
Santhegam santhegam
Santhegamennum oru sarakku adhu
Sagala edathulaiyum irukku

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சமி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

ஆண் : சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
பெண்கள் மனசிலேதான் இருக்கு
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க
முடிவாய் போட்டு வச்சக் கணக்கு..
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க
முடிவாய் போட்டு வச்சக் கணக்கு..
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
பெண்கள் மனசிலேதான் இருக்கு

ஆண் : வேலைக்கு போனவங்க வீடு வந்து சேர
கொஞ்ச நேரம் தவறினால் சந்தேகம்
வீட்டுக்கு வந்ததும் அலுத்து சலித்து போய்
நீட்டி நிமிர்ந்துட்டா சந்தேகம்..
வீட்டுக்கு வந்ததும் அலுத்து சலித்து போய்
நீட்டி நிமிர்ந்துட்டா சந்தேகம்..
சந்தேகம்…சந்தேகம்….

பெண் : சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
ஆண்கள் மனசிலேதான் இருக்கு
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க
முடிவாய் போட்டு வச்சக் கணக்கு..
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
ஆண்கள் மனசிலேதான் இருக்கு

பெண் : சீவி முடிச்சிக்கிட்டு நாளுங்கிழமையிலே
சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சீவி முடிச்சிக்கிட்டு நாளுங்கிழமையிலே
சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சிரிச்ச முகங்காட்டி நடந்து திரிஞ்சிட்டா
பொறக்குது ஆம்பளைக்கு சந்தேகம்..
சந்தேகம் சந்தேகம் …

பெண் : சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
ஆண்கள் மனசிலேதான் இருக்கு

ஆண் : பனமரத்தடியிலே உட்கார்ந்து இருக்கிறவன்
பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பசும் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பனமரத்தடியிலே உட்கார்ந்து இருக்கிறவன்
பாலைக் குடிச்சாலும் சந்தேகம்
பசும் பாலைக் குடிச்சாலும் சந்தேகம்

பெண் : பணத்துல மிதக்கிற உலகத்துல
எந்தப் பக்கத்துல பார்த்தாலும் சந்தேகம்..

ஆண் : ஆஹா.. பெண் : சந்தேகம்..
ஆண் : ஒஹோ..பெண் : சந்தேகம்..

இருவர் : சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
சகல இடத்துலேயும் இருக்கு……

ஆண் : பொல்லாதது இந்த சந்தேகம்
உயிரைக் கொல்லாமலே கொல்லுற நோயாகும்
பொல்லாதது இந்த சந்தேகம்
உயிரைக் கொல்லாமலே கொல்லுற நோயாகும்
இதை நல்லாப் புரிஞ்சிகிட்டு
இதை நல்லாப் புரிஞ்சிகிட்டு
எல்லாரும் வாழ்க்கையை
நடத்தணும் அதுவே முறையாகும்
நம்பிக்கையே அதுக்கு மருந்தாகும்
நான்ஆராய்ந்து சொல்லும் அறிவுரை ஆகும்…

பெண் : சந்தேகம் சந்தேகம் சந்தேகம்
சந்தேகம் என்னுமொரு சரக்கு அது
சகல இடத்துலேயும் இருக்கு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here