Singer : P. Bhanumathi

Music by : C. R. Subburaman

Female : Sarasa sallaabam seivom
Arugil vaarumaiyaa
Sarasa sallaabam seivom
Arugil vaarumaiyaa

Female : Madhana singaaraa tharunameedhae
Thaamadham seivadhu thagaadhu
Mana noi theerumaiyaa

Female : Sarasa sallaabam seivom
Arugil vaarumaiyaa

Female : Insol kiligalum
Konjum puraavum
Inbamaai kulavidum
Aanandha madhupol
Magizhvudan vandhungal
Kailaagu thaarumaiyaa

Female : Sarasa sallaabam seivom
Arugil vaarumaiyaa

Female : Dhivya yauvana saukyam
Ponaal varaadhaiyaa
Valuvil vandha enmeedhu idhu
Niyaayamaa innum paaraamugamaa
Ennazhagir keedum undo
Ulagil paarumaiyaa

Female : Sarasa sallaabam seivom
Arugil vaarumaiyaa

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா

பெண் : மதன சிங்காரா தருணமீதே
தாமதம் செய்வது தகாது
மனநோய் தீருமையா

பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா

பெண் : இன்சொல் கிளிகளும்
கொஞ்சும் புறாவும்
இன்பமாய் குலவிடும்
ஆனந்த மதுபோல்
மகிழ்வுடன் வந்துங்கள்
கைலாகு தாருமையா

பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா

பெண் : திவ்ய யௌவன சௌக்யம்
போனால் வராதையா
வலுவில் வந்த என்மீது இது
நியாயமா இன்னும் பாராமுகமா
என்னழகிற் கீடும் உண்டோ
உலகில் பாருமையா

பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here