Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu

Male : Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu

Male : Saatchi orae saatchi

Male : Ulagam avanathu arasatchi
Avan uruvamthaan un manasatchi
Ulagam avanathu arasatchi
Avan uruvamthaan un manasatchi
Ullam endrum deivam athu
Solluvathillai poi saatchi
Solluvathillai poi saatchi

Male : Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu

Male : Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu

Male : Saatchi orae saatchi

Male : Kadhalukkirandu kann saatchi
Antha kangalin thavarukku penn saatchi
Kadhalukkirandu kann saatchi
Antha kangalin thavarukku penn saatchi

Male : Amma unthan vazhakkai theerkka
Kaalam seivathu aaraatchi
Kaalam seivathu aaraatchi

Male : Saatchi orae saatchi

Male : Aayiram irukkum oor saatchi
Idhil unmai enbathu yaar saatchi
Aayiram irukkum oor saatchi
Idhil unmai enbathu yaar saatchi

Male : Siruvan intha oruvan thaanae
Sattam thedum mei saatchi
Sattam thedum mei saatchi

Male : Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu

Male : Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது

ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது

ஆண் : சாட்சி ஒரே சாட்சி

ஆண் : உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம் தான் உன் மனசாட்சி
உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம் தான் உன் மனசாட்சி
உள்ளம் என்றும் தெய்வம் அது
சொல்லுவதில்லை பொய் சாட்சி
சொல்லுவதில்லை பொய் சாட்சி

ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது

ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது

ஆண் : சாட்சி ஒரே சாட்சி

ஆண் : காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி
காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி

ஆண் : அம்மா உந்தன் வழக்கை தீர்க்க
காலம் செய்வது ஆராய்ச்சி
காலம் செய்வது ஆராய்ச்சி

ஆண் : சாட்சி ஒரே சாட்சி

ஆண் : ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி
ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி

ஆண் : சிறுவன் இந்த ஒருவன் தானே
சட்டம் தேடும் மெய் சாட்சி
சட்டம் தேடும் மெய் சாட்சி

ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது

ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here