Singers : S.P. Balasubrahmaniyam and K.S.Chithra

Music by : Bharathwaj

Female : { Satham illaadha thanimai keten
Yutham illaadha uzhagam keten
Rathathil endrendrum vegam keten
Ragasiyamillaa ullam keten } (2)

Male : Satham illaadha thanimai keten
Yutham illaadha uzhagam keten
Rathathil endrendrum vegam keten
Ragasiyamillaa ullam keten

Male : Uyirai killaadha uravai keten
Otrai kanneer thuliyai keten
Valigal seiyaadha vaarthai keten
Vayadhuku chariyaana vaazhkai keten

Male : Idigal illaadha megam keten
Ilamai kedaadha mogamketen
Parandhu parandhu nesam keten
Paasaangillaadha paasam keten

Male : Pullin nuniyil paniyai keten
Poovin madiyil padukai keten
Thaanae urangum vizhiyai keten
Thalaiyai kodhum viralai keten

Male : Nilavil nanaiyum solai keten
Neela kuyilin paadal keten
Nadandhu poga nadhikarai keten
Kidandhu urula pulveli keten

Male : Thottu paduka nilavai keten
Etti parika vinmeen keten
Thukam marandha thookam keten
Thookam manakum kanavai keten

Male : Boomikellam oru pagal keten
Poovukellam aayul keten
Manidharkellam oru manam keten
Paravaikellam thaai mozhi keten

Male : Uzhagukellam sama mazhai keten
Oorukellam oru nadhi keten
Vaanam muzhuka nilavai keten
Vaazhumbodhae svargam keten

Male : Ennam ellam uyara keten
Eriyum theeyaai kavidhai keten
Kanneer kadandha gnaanam keten
Kaamam kadandha yogam keten

Male : Sutrum kaatrin sudhandhiram keten
Situ kuruviyin siragai keten
Uchandhalaimel mazhaiyai keten
Ullangaalil nadhiyai keten

Male : Pankonda paadal payila keten
Paravaikirukum vaanam keten
Nandri kedaadha natpai keten
Nadunga vidaadha selvam keten

Male : Malaril oru naal vasika keten
Mazhaiyin sangeedham rusika keten
Nilavil nadhiyil kulika keten
Ninaivil sandhanam manaka keten

Male : Vizhundhaal nizhal pol vizhavae keten
Azhudhaal mazhai pol azhavae keten
Ekaandham ennodu vaazha keten
Eppodhum sirikindra udhadugal keten

Male : Panithuli pol oru sooriyan keten
Sooriyan pol oru panithuli keten
Raajaraajanin vaalai keten
Valluvan ezhudhiya kolai keten

Male : Bhaaradhiyaarin sollai keten
Paarthiban thodutha villai keten
Maaya kannan kuzhalai keten
Madurai meenaakshi kiliyai keten

Male : Sondha uzhaipil sorai keten
Thottu kolla paasam keten
Mazhaiyai pondra porumaiyai keten
Pullai pondra panivai keten
Puyalai pondra thunivaiketen

Male : Idiyai thaangum thozhai keten
Izhivai thaangum idhayam keten
Throgam thaangum valimai keten
Tholaindhu vidaadha porumaiyai keten

Male : Sonnadhu ketkum ullam keten
Sonnaal saagum vegam keten
Kayavarai ariyum kangal keten
Kaalam kadakum kaalgal keten

Male : Chinna chinna tholvigal keten
Seekiram aarum kaayam keten
Moodiyillaadha mugangal keten
Poliyillaadha punnagai keten

Male : Thavazhum vayadhil thaai paal keten
Thaavum vayadhil bommaigal keten
Aindhu vayadhil puthagam keten
Aaraam viralaai pena keten

Male : Kaasae vendam karunai keten
Thalaiyanai vendam thaai madi keten
Kootu kilipol vaazha keten
Kuraindha patcha anbai keten

Male : Ithanai ketum kidaikavillai
Idhilae edhuvum nadakavillai
Vaazhve vaazhve vendam endru
Maranam maranam maranam ketennnnnnnnnnn

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன் யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன் } (2)

ஆண் : சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன் யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன்

ஆண் : உயிரைக் கிள்ளாத
உறவைக் கேட்டேன் ஒற்றைக்
கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை
கேட்டேன் வயதுக்குச் சரியான
வாழ்க்கை கேட்டேன்

ஆண் : இடிகள் இல்லாத
மேகம் கேட்டேன் இளமை
கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்
கேட்டேன் பாசாங்கில்லாத
பாசம் கேட்டேன்

ஆண் : புல்லின் நுனியில்
பனியைக் கேட்டேன் பூவின்
மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக்
கேட்டேன் தலையைக் கோதும்
விரலைக் கேட்டேன்

ஆண் : நிலவில் நனையும்
சோலை கேட்டேன் நீலக்
குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை
கேட்டேன் கிடந்து உருளப்
புல்வெளி கேட்டேன்

ஆண் : தொட்டுப் படுக்க
நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீன்
கேட்டேன் துக்கம் மறந்த
தூக்கம் கேட்டேன் தூக்கம்
மணக்கும் கனவைக் கேட்டேன்

ஆண் : பூமிக்கெல்லாம்
ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள்
கேட்டேன் மனிதர்கெல்லாம்
ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம்
தாய்மொழி கேட்டேன்

ஆண் : உலகுக்கெல்லாம்
சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு
நதி கேட்டேன் வானம்
முழுக்க நிலவைக்
கேட்டேன் வாழும்
போதே சொர்க்கம்
கேட்டேன்

ஆண் : எண்ணம்
எல்லாம் உயரக்
கேட்டேன் எரியும்
தீயாய் கவிதை
கேட்டேன் கண்ணீர்
கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம்
கேட்டேன்

ஆண் : சுற்றும் காற்றின்
சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின்
சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல்
மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக்
கேட்டேன்

ஆண் : பண்கொண்ட
பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம்
கேட்டேன் நன்றி கெடாத
நட்பைக் கேட்டேன் நடுங்க
விடாத செல்வம் கேட்டேன்

ஆண் : மலரில் ஒரு
நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம்
ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக்
கேட்டேன் நினைவில் சந்தனம்
மணக்கக் கேட்டேன்

ஆண் : விழுந்தால்
நிழல் போல் விழவே
கேட்டேன் அழுதால்
மழை போல் அழவே
கேட்டேன் ஏகாந்தம்
என்னோடு வாழக்
கேட்டேன் எப்போதும்
சிரிக்கின்ற உதடுகள்
கேட்டேன்

ஆண் : பனித்துளி
போல் ஒரு சூரியன்
கேட்டேன் சூரியன்
போல் ஒரு பனித் துளி
கேட்டேன் ராஜராஜனின்
வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய
கோலைக் கேட்டேன்

ஆண் : பாரதியாரின்
சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த
வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக்
கேட்டேன் மதுரை மீனாட்சி
கிளியைக் கேட்டேன்

ஆண் : சொந்த
உழைப்பில் சோறை
கேட்டேன் தொட்டுக்
கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற
பொறுமையை கேட்டேன்
புல்லைப் போன்ற
பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற
துணிவைக் கேட்டேன்

ஆண் : இடியைத்
தாங்கும் தோளை
கேட்டேன் இழிவைத்
தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக்
கேட்டேன் தொலைந்து விடாத
பொறுமையை கேட்டேன்

ஆண் : சொன்னது
கேட்கும் உள்ளம்
கேட்டேன் சொன்னால்
சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள்
கேட்டேன் காலம் கடக்கும்
கால்கள் கேட்டேன்

ஆண் : சின்ன சின்னத்
தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம்
கேட்டேன் மூடியில்லாத
முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை
கேட்டேன்

ஆண் : தவழும் வயதில்
தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள்
கேட்டேன் ஐந்து வயதில்
புத்தகம் கேட்டேன் ஆறாம்
விரலாய் பேனா கேட்டேன்

ஆண் : காசே வேண்டாம்
கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம்
தாய்மடி கேட்டேன் கூட்டுக்
கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக்
கேட்டேன்

ஆண் : இத்தனை கேட்டும்
கிடைக்கவில்லை இதிலே
எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம்
என்று மரணம் மரணம் மரணம்
கேட்டேன்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here