Singers : Seerkazhi Govindarajan and N.S. Krishnan

Music by : G. Ramanathan

Lyrics by : Clown Sundaram

Male : Seer mevu guru padham
Sindhaiyodu vaaikkinum
Siram meedhu vaithu potri
Jagamellaam mecha jayakodi parakka vidum
Veera prathaaban naane sari

Male : Sangathu pulavar palar
Thangathodu porpathakkam
Vangathu ponnaadai parisalithaar
Enakku ingillai eedena solli kilithaar

Male : Intha singathuku munne oadi
Pangapatta paaraatheerar
Seerezhuthu paadi vaaren naane
Atharku oarezhuthu bathil solli paaren

Male : Yaanaiyai pidithu yaanaiyai pidithu
Oru paanaikkul adaithu vaikka
Aathira padubavar pol allavaa

Male : Yaanaiyai pidithu
Oru paanaikkul adaithu vaikka
Aathira padubavar pol allavaa
Umathaaramba kavi solluthe pulavaa

Male : Veettin poonai kutti kaattil oadi
Puliyai pidithu thinna
Purappatta kathai pol allavaa
Tharpugazhchi paadugiraaye pulavaa

Male : Boothaanam kannigathanam
Sornathaanam annadanam
Kothaanam undu parpala dhaanangal
Itharku melaana dhaanam irunthaal sollungal

Male : Kelvikku bathilai kondaa
Udaichi eriven rendaa
Unnai jeyichi kattuven mundaa
Appuram parakka viduven sendaa
Jayakodi jayakodi parakkuthu jayakodi

Male : Solren..
Ethanai dhaanam thanthaalum
Entha logam pugazhnthaalum
Dhaanathil siranthathu nithaananthaan
Nithaananthaan
Ethanai dhaanam thanthaalum
Entha logam pugazhnthaalum
Dhaanathil siranthathu nithaananthaan
Nidhaanathanai izhanthavarku eenandhaan

Male : Sollittaan
Kovilai katti vaippathu ethanaale
Kovilai katti vaippathu ethanaale

Male : Sirpa velaikku perumai undu athanaale
Paarthukkada sarithaan

Male : Anna sathiram iruppathu ethanaale

Male : Anna sathiram iruppathu ethanaale

Male : Pala thinnai thoongi pasangal iruppathaale
Eppadi

Male : Paradhesiyaai thirivathu ethanaale
Paradhesiyaai thirivathu ethanaale
Male : Mmmm.. avan pathu veettu sari.. venaam
Avan pathu veettu sothu rusi kandathaale

Male : Thambi inga gavani
Kaarirul soozhuvathu evvidathile
Thambi kaarirul soozhuvathu evvidathile
Male : Katrarivillaatha moodar nenjagathile
Anne Katrarivillaatha moodar nenjagathile

Male : Sollipittiye

Male : Pugaiyum neruppilaamal erivathethu
Male : Pugaiyum neruppillaama atheppadi eriyum
Male : Naan sollattumaa sollu
Pugaiyum neruppilaamal erivathethu
Pasithu vaadum makkal vayiru athu

Male : Haan sarithaan sarithaan

Male : Ulagathile bayangaramaana aayutham ethu
Male : Kathi.. illa.. kodaari.. illa.. eetti.. mmhhmm
Kadappaarai.. illai.. athuvumillaiyaa
Appuram bayangaramaana aayutham agni thiraavamo
Athu aayutham illaiye
Ada theriya maatenguthe.. neeye sollappaa

Male : Ulagathile bayangaramaana aayutham ethu
Nilai kettu pona nayavanjagarin
Naakku thaan athu aahaa aahaa
Nilaikettu pona nayavanjagarin naakku thaan athu..

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் என். எஸ். கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கிளவுண் சுந்தரம்

ஆண் : சீர் மேவு குரு பதம் சிந்தையோடு வாய்க்கினும்
சிரம் மீது வைத்து போற்றி
ஜகமெல்லாம் மெச்ச ஜெயக்கொடி பறக்க விடும்
வீரப் பிரதாபன் நானே சரி

ஆண் : சங்கத்துப் புலவர் பலர்
தங்கத்தோடு பொற்பதக்கம்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென சொல்லிக் களித்தார்

ஆண் : இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி
பங்கப்பட்ட பாராதீரர்
சீரெழுத்து பாடி வாரேன் நானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்

ஆண் : யானையை பிடித்து….யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா

ஆண் : யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா

ஆண் : வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

ஆண் : பூதானம் கன்னிகாதானம்
சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

ஆண் : கேள்விக்கு பதிலை கொண்டா
உடைச்சி ஏறிவேன் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

ஆண் : சொல்றேன்……
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்

ஆண் : சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே

ஆண் : சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்

ஆண் : அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

ஆண் : அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

ஆண் : பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி

ஆண் : பரதேசியாய் திரிவது எதனாலே
பரதேசியாய் திரிவது எதனாலே

ஆண் : ம்ம்ம்….அவன் பத்து வீட்டு சரி ….. வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே

ஆண் : தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே

ஆண் : கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
அண்ணே கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

ஆண் : சொல்லிப்பிட்டியே

ஆண் : புகையும் நெருப்பிலாமல் எரிவதெது

ஆண் : புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்

ஆண் : நான் சொல்லட்டுமா சொல்லு
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

ஆண் : சரிதான் சரிதான் சரிதான்

ஆண் : உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது

ஆண் : கத்தி…இல்ல….கோடாரி…இல்ல…ஈட்டி…ம்ஹூம்
கடப்பாரை…இல்லை…அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் அக்னி திராவமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே….நீயே சொல்லப்பா

ஆண் : உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக் கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here