Singer : T. M. Soundararajan

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Male : Seitha paavam theeruthadaa….aa….aa….
Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male : Azhagaana poi vithaithaen sivagurunaathaa
Indru aruvadaiyai nadaththukindraen sivagurunaathaa
Munpuraththil potta vithai sivagurunaathaa
Indru mudhugu pakkam vilaiyuthadaa sivagurunaathaa

Male : Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male : Thavaraanalum vaazhvammaa
Adhu thalaivan illaamal yaedhammaa
Thalaivan enbavan kallaanaalum
Thazhuvi kolvathu thamizhammaa…..
Thazhuvi kolvathu thamizhammaa…..aa…aa….

Male : Vazhakkai thoduththathum neeyammaa
Angu vaatham purivathum neeyammaa
Unakkae neethaan edhiri endraal
Ingu udhavikku varuvathu yaarammaa….
Udhavikku varuvathu yaarammaa….aa….aa….

Male : Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : செய்த பாவம் தீருதடா…ஆ….ஆ….
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண் : அழகான பொய் விதைத்தேன் சிவகுருனாதா
இன்று அறுவடையை நடத்துகின்றேன் சிவகுருனாதா
முன்புறத்தில் போட்ட விதை சிவகுருனாதா
இன்று முதுகு பக்கம் விளையுதடா சிவகுருனாதா

ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண் : தவறானாலும் வாழ்வம்மா
அது தலைவன் இல்லாமல் ஏதம்மா
தலைவன் என்பவன் கல்லானாலும்
தழுவிக் கொள்வது தமிழம்மா……
தழுவிக் கொள்வது தமிழம்மா……ஆ…ஆ…

ஆண் : வழக்கை தொடுத்ததும் நீயம்மா
அங்கு வாதம் புரிவதும் நீயம்மா
உனக்கே நீதான் எதிரி என்றால்
இங்கு உதவிக்கு வருவது யாரம்மா…….
உதவிக்கு வருவது யாரம்மா…….ஆ…ஆ…

ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண் : இடம் இல்லாத மனிதனுக்கு இறைவனின் வீடு
அங்கு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு
இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு……

ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா….
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here