Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Selai virkum kadaiyai kandean theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Female : Paalai virkkum pennai kandaen pattikkaattilae
Paalai virkkum pennai kandaen pattikkaattilae
Than paruvam virkkum pennai kandaen pattanaththilae….
Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Female : Ozhukkamendru siruvayathil paadam padiththaal
Ival oruvanukkae oruththiyendru vedham padiththaal
Vazhukkividum bhoomiyilae vanthu piranthaal
Intha vanchamillaa paavimagal vazhukki vizhunthaal
Intha vanchamillaa paavimagal vazhukki vizhunthaal
Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Female : Nallavelai kannakkikku penmagal illai
Antha naalaayini arunthathikkum sannathi illai
Nallavelai kannakkikku penmagal illai
Antha naalaayini arunthathikkum sannathi illai
Irunthirunthaal intha neram entha kolamo
Avar irupathukkum muppathukkum alaiya nerumo
Avar irupathukkum muppathukkum alaiya nerumo
Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Female : Kattazhagai pengalukkae kadavul thanthandi
Athai vettaveli pottalilae vittu vittaandi
Thottavarkal anaivarukkum sonthamendraandi
Athai sollivittu koyililae thoongivittandi….

Female : Selai virkum kadai kandaen theru theruvaaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக
ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக
சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக
ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக
பெண் : பாலை விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டிக்காட்டிலே
பாலை விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டிக்காட்டிலே
தன் பருவம் விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டணத்திலே………
பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக
ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக
பெண் : ஒழுக்கமென்று சிறுவயதில் பாடம் படித்தாள்
இவள் ஒருவனுக்கே ஒருத்தியென்று வேதம் படித்தாள்
வழுக்கிவிடும் பூமியிலே வந்து பிறந்தாள்
இந்த வஞ்சமில்லா பாவிமகள் வழுக்கி விழுந்தாள்
இந்த வஞ்சமில்லா பாவிமகள் வழுக்கி விழுந்தாள்
பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக
ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக
பெண் : நல்லவேளை கண்ணகிக்குப் பெண்மகள் இல்லை
அந்த நளாயினி அருந்ததிக்கும் சந்ததி இல்லை
நல்லவேளை கண்ணகிக்குப் பெண்மகள் இல்லை
அந்த நளாயினி அருந்ததிக்கும் சந்ததி இல்லை
இருந்திருந்தால் இந்த நேரம் எந்தக் கோலமோ
அவர் இருபதுக்கும் முப்பதுக்கும் அலைய நேருமோ
அவர் இருபதுக்கும் முப்பதுக்கும் அலைய நேருமோ
பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக
ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக
பெண் : கட்டழகைப் பெண்களுக்கே கடவுள் தந்தான்டி
அதை வெட்டவெளிப் பொட்டலிலே விட்டு விட்டான்டி
தொட்டவர்கள் அனைவருக்கும் சொந்தமென்றான்டி
அதைச் சொல்லிவிட்டுக் கோயிலிலே தூங்கிவிட்டாண்டி…..