Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae

Female : Koondil irundhu kuyil ondru paadum
Paadiya paadal dhisai kandu oodum
Odiya nenjai orr ullam thedum
Unmaiyum anbum oomaigalagum

Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae

Female : Maaligai thottam malarndhadhu mullai
Valarthavan yaaroo avan ingu illai
Maaligai thottam malarndhadhu mullai
Valarthavan yaaroo avan ingu illai
Nallavarkellam vaasalil ellai
Nallavarkellam vaasalil ellai
Yaar arivaaroo naan sonna sollai

Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae

Female : Ninaippavai kodi vaarthaigal illai
Nerungavum aasai thairiyam illai
Manamena ondru iruppadhu thollai
Manadhukku naduvae yen indha illai

Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே

பெண் : கூண்டிலிருந்து குயிலொன்று பாடும்
பாடிய பாடல் திசை கண்டு ஓடும்
ஓடிய நெஞ்சை ஒருள்ளம் தேடும்
உண்மையும் அன்பும் ஊமைகளாகும்

பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே

பெண் : மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
வளர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
வளர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
நல்லவர்க்கெல்லாம் வாசலில் எல்லை
நல்லவர்க்கெல்லாம் வாசலில் எல்லை
யாரறிவாரோ நான் சொன்ன சொல்லை

பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே

பெண் : நினைப்பவை கோடி வார்த்தைகள் இல்லை
நெருங்கவும் ஆசை தைரியம் இல்லை
மனமென ஒன்று இருப்பது தொல்லை
மனதுக்கு நடுவே ஏனிந்த எல்லை

பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here