Singers : Tippu and Minmini

Music by : Ilayaraja

Female Chorus : Senthamizh naadenum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae

Female Chorus : Senthamizh naadenum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae
Engal thandhaiyar naadendra podhinilae
Oru sakthi pirakkudhu moochinilae

Female Chorus : Senthamizh naadenum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae
Engal thandhaiyar naadendra podhinilae
Oru sakthi pirakkudhu moochinilae

Female : Kalvi sirandha thamizh naadu
Pugazh kamban pirandha thamizh naadu

Female Chorus : Kalvi sirandha thamizh naadu
Pugazh kamban pirandha thamizh naadu

Female : Nalla pal vidhamaana saathirathin
Manam paarengum veesum thamizh naadu

Female Chorus : Nalla pal vidhamaana saathirathin
Manam paarengum veesum thamizh naadu Senthamizh naadenum podhinilae

Female Chorus : Inba thaen vandhu paayudhu kaadhinilae
Senthamizh naadenum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae

Male Chorus : Vanmaiyilae ulla thinmaiyilae

Female Chorus : Mana thanmaiyilae adhin unmaiyilae

Male Chorus : Unmaiyilae thavaraadha kuravar

Chorus : Unarvinilae uyar naadu

Chorus : Innal vandhutridum podhagarkkanjom
Yaezhaiyar aagiyae ee mannil thunjom

Chorus : Thannalam paenum izhit thozhil illai
Thaai thirunaattukku eedengum illoai

Female Chorus : Senthamizh naadenum podhinilae

Female Chorus : Inba thaen vandhu paayudhu kaadhinilae
Senthamizh naadenum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae

Male Chorus : Aayudham seivom nalla kaagidham seivom
Aalaigal vaippom kalvi chaalaigal vaippom
Oyudhal seiyom thalai saayudhal seiyom
Unmaigal solvom pala vanmaigal seivom

Male : Therkkil irundhae vandhavanae

Female Chorus : Aa… aa…

Male : Indha dhaesathirkkae thannai thandhu vittaan

Female Chorus : Aa… aa…

Male : Engum thannalam illaa thalaivanai pol
Innaadu ennaalum kandidumo

Male Chorus : Ingivanai yaam peravae

Chorus : Naadu enna thavam seidhadhuvo
Enna thavam seidhadhuvo

பாடகர்கள் : திப்பு மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண் குழு : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண் குழு : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண் : கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

பெண் குழு : கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

பெண் : நல்ல பல் விதமான சாத்திரத்தின்
மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

பெண் குழு : நல்ல பல் விதமான சாத்திரத்தின்
மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே

பெண் குழு : இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண் குழு : வண்மையிலே உள்ள திண்மையிலே

பெண் குழு : மனத் தன்மையிலே அதின் உண்மையிலே

ஆண் குழு : உண்மையிலே தவறாத குறவர்

குழு : உணர்வினிலே உயர் நாடு

குழு : இன்னல் வந்துற்றிடும் போதர்க்கஞ்சோம்
ஏழையர் ஆகியே இம்மண்ணில் துஞ்சோம்

குழு : தன்னலம் பேணும் இழித் தொழில் இல்லை
தாய்த் திருநாட்டுக்கு ஈடெங்கும் இல்லை

பெண் குழு : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண் குழு : ஆயுதம் செய்வோம்
நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்
கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்
பல வன்மைகள் செய்வோம்

ஆண் : தெற்கில் இருந்தே வந்தவனே

பெண் குழு : ஆ……ஆ…

ஆண் : இந்த தேசத்திற்கே தன்னைத் தந்து விட்டான்

பெண் குழு : ஆ… ஆ…

ஆண் : எங்கும் தன்னலம் இல்லாத் தலைவனைப் போல்
இந்நாடு எந்நாளும் கண்டிடுமோ

ஆண் குழு : இங்கிவனை யாம் பெறவே

குழு : நாடு என்ன தவம் செய்ததுவோ
என்ன தவம் செய்ததுவோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here