Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

Male : Thaen mandabam mangalam
Manthiram sangamam nenjam
Female : Vaan minnidum gopuram
Thannidam en manam thanjam

Male : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

Female : Panneeril midhakkum venn neela vizhigal
Paaraatta thudikkindrana aa….aa…
Panneeril midhakkum venn neela vizhigal
Paaraatta thudikkindrana aa….aa…
Pollaatha ninaivum sallaaba kanavum
Ullaasam ketkindrana
Adhu sinthanai kolam adhil santhana vaasam
Namm ullangal kaanbathu sugapogam

Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

Male : Ponnodam eduththu pooththoovi mudiththu
Vinnodu poe varuvom
Vinnodum nilavil manjangal amaiththu
Vilaiyaadi vaazhnthiduvom
Adhu innoru vedham antha indhira geetham
Sugam thaalaattum aanantha thalirkolam…

Female : Manthaara kodiyin singaara malargal
Vaanaththai paarkindrana
Male : Poovodu kalakkum ponnaana meengal
Bhoomiyai paarkkindrana

Female : Adhu nyaanigal kolam
Male : Ilamaenigal raagam
Both : Pirar kaanaatha mogana kalaikkolam
Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்….

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்….

ஆண் : தேன் மண்டபம் மங்கலம்
மந்திரம் சங்கமம் நெஞ்சம்
பெண் : வான் மின்னிடும் கோபுரம்
தன்னிடம் என் மனம் தஞ்சம்

ஆண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்…

பெண் : பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்
பாராட்டத் துடிக்கின்றன ஆ…ஆ….
பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்
பாராட்டத் துடிக்கின்றன ஆ…ஆ….
பொல்லாத நினைவும் சல்லாபக் கனவும்
உல்லாசம் கேட்கின்றன
அது சிந்தனைக் கோலம் அதில் சந்தன வாசம்
நம் உள்ளங்கள் காண்பது சுகபோகம்

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்…

ஆண் : பொன்னோடம் எடுத்து பூத்தூவி முடித்து
விண்ணோடு போய் வருவோம்
விண்ணோடும் நிலவில் மஞ்சங்கள் அமைத்து
விளையாடி வாழ்ந்திடுவோம்
அது இன்னொரு வேதம் அந்த இந்திர கீதம்
சுகம் தாலாட்டும் ஆனந்தக் தளிர்க்கோலம்…….

பெண் : மந்தாரக் கொடியின் சிங்கார மலர்கள்
வானத்தைப் பார்க்கின்றன
ஆண் : பூவோடு கலக்கும் பொன்னான மீன்கள்
பூமியைப் பார்க்கின்றன

பெண் : அது ஞானிகள் கோலம்
ஆண் : இளமேனிகள் ராகம்
இருவர் : பிறர் காணாத மோகனக் கலைக்கோலம்
செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here