Singers : K. J. Jesudass and S. P. Sailaja

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male : Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devathai oruththi
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam

Female : Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam

Male : Sevvaanamae seer kondu vaa
Female : Venmegamae thaer kondu vaa

Male : ………………
Female : ……………….

Male : Sivantha idhazhgal amutham vazhangum
Chiththira vizhigal dhinamum mayakkum
Female : Inaintha karangal sugaththai alikkum
Idhaya nadhigal uravil kalakkum

Male : Sugamana thirunaal idhu
Female : Indru enai thedi varugindrathu
Male : Sugamana thirunaal idhu
Female : Indru enai thedi varugindrathu

Male : Sevvaanamae seer kondu vaa
Female : Venmegamae thaer kondu vaa

Male : Nadanthu nadanthu nalintha idaiyo
Kanigal sumanthu melintha kodiyo
Female : Valainthu valainthu pidikkum karamo
Vaazhkkai muzhuthum thunaikku varumo

Male : Paaraatta mozhi illaiyo
Female : Intha paarvaikku porul illaiyo
Male : Paaraatta mozhi illaiyo
Female : Intha paarvaikku porul illaiyo

Male : Sevvaanamae seer kondu vaa
Female : Venmegamae thaer kondu vaa
Male : Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram
Female : Idhu ponnanthi ilamaalai kaalam
Both : ………………..

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி, சைலஜா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்

பெண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவன் ஒருவன்
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் : ………………………
பெண் : ……………………..

ஆண் : சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்
சித்திர விழிகள் தினமும் மயங்கும்
பெண் : இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்
இதய நதிகள் உறவில் கலக்கும்

ஆண் : சுகமான திருநாள் இது
பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது
ஆண் : சுகமான திருநாள் இது
பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் : நடந்து நடந்து நலிந்த இடையோ
கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ
பெண் : வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ
வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ

ஆண் : பாராட்ட மொழி இல்லையோ
பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
ஆண் : பாராட்ட மொழி இல்லையோ
பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா
ஆண் : இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்
பெண் : இது பொன்னந்தி இளமாலைக் காலம்
இருவர் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here