Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Male : Silai seiya kaigal undu
Thangam konjam thaevai
Singaara paadal undu
Thamizh konjam thaevai
Male : Silai seiya kaigal undu
Thangam konjam thaevai
Male : Aranmanai ondru undu
Raani illai ingu
Alangaara thottam undu
Kili illai ingu
Male : Manam ennum kovil undu
Deivam illai ingu
Maharaani ennai vittu
Nee povadhengu
Male : Silai seiya kaigal undu
Thangam konjam thaevai
Singaara paadal undu
Thamizh konjam thaevai
Male : Silai seiya kaigal undu
Thangam konjam thaevai
Female : Aranmanai thaedi vandhu
Pani seiyum pennai
Andhapura raani endru
Solvadhenna ennai
Female : Mannan andri yaararivaar
Kanni ilam kannai
Manam ennum koyilukkul
Silai vaithaen unnai
Female : Silai seiya thangam undu
Kaigal konjam thaevai
Singaara thamizhum undu
Paadal ondru thaevai
Female : Silai seiya thangam undu
Kaigal konjam thaevai
Male : Pidipatta maanai indru
Sirai vaithu paarpaen
Pillai ena aadavittu
Alli mugam saerpaen
Female : Mudivillai endra vannam
Mogha kadhai solvaen
Muthamittu muthamittu
Chithirangal kaanbaen
Female : Silai seiya kaigal undu
Thangam ingu undu
Male : Singaara paadal undu
Thamizh ingu undu
Both : Silai seiya kaigal undu
Thangam ingu undu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
ஆண் : அரண்மனை ஒன்று உண்டு
ராணி இல்லை இங்கு
அலங்காரத் தோட்டம் உண்டு
கிளி இல்லை இங்கு
ஆண் : மனம் என்னும் கோயில் உண்டு
தெய்வம் இல்லை இங்கு
மகாராணி என்னை விட்டு
நீ போவதெங்கு
ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
பெண் : அரண்மனை தேடிவந்து
பணி செய்யும் பெண்ணை
அந்தப்புர ராணியென்று
சொல்வதென்ன என்னை
பெண் : மன்னன் அன்றி யாரறிவார்
கன்னி இளம் கண்ணை
மனம் என்னும் கோயிலுக்குள்
சிலை வைத்தேன் உன்னை
பெண் : சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை
சிங்காரத் தமிழும் உண்டு
பாடல் ஒன்று தேவை
பெண் : சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை
ஆண் : பிடிப்பட்ட மானை இன்று
சிறை வைத்து பார்ப்பேன்
பிள்ளையென ஆடவிட்டு
அள்ளி முகம் சேர்ப்பேன்
பெண் : முடிவில்லை என்ற வண்ணம்
மோகக் கதை சொல்வேன்
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் காண்பேன்
பெண் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் இங்கு உண்டு
ஆண் : சிங்காரத் பாடல் உண்டு
தமிழ் இங்கு உண்டு
இருவரும் : சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் இங்கு உண்டு…