Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Male : Aayar kalaigal aruvathunaanginaiyum
Mmm…mm…mm…
Eeya unarvikkum em annai –
Thooya urppalingu polval
En ullathin ullae
Iruppalingu vara thidar

Male : Sindhanai sei manamae…
Sindhanai sei manamae dhinamae…ae

Male : Sindhanai sei manamae
Seidhaal theevinai agandridumae
Sivagaami maganai shanmuganai

Male : Sindhanai sei manamae
Seidhaal theevinai agandridumae
Sivagaami maganai shanmuganai
Sindhanai sei manamae… manamae… ae…ae

Male : Senthamizhkkarul nyaana
Dhesiga mei nyaana dhesiganai…
Aa…aa…aa….aa….aa….aa….aaa…a.a…..aa…
Haaa….aaa….aa….aaa….aa…aa…

Male : Senthamizhkkarul nyaana
Dhesiganai…sendhil
Kandhanai vaanavar kaavalanai guhanai

Male : Sindhanai sei manamae
Seidhaal theevinai agandridumae
Sivagaami maganai shanmuganai
Sindhanai sei manamae… manamae… ae…ae

Male : Santhadham moovaasai
Saghadhiyil uzhandranai…
Eee…ee…ee….ee….ee….

Male : Santhadham moovaasai
Saghadhiyil uzhandranai
Samarasa sanmaargha
Neri thanai marandhanai
Samarasa sanmaargha
Neri thanai marandhanai
Andhagan varum podhu
Avaniyil yaar thunai
Andhagan varum podhu
Avaniyil yaar thunai
Aadhalinaal indrae
Arumarai paraviya saravana bhava guhanai

Male : Sindhanai sei manamae
Seidhaal theevinai agandridumae
Sivagaami maganai shanmuganai
Sindhanai sei manamae… manamae… ae…ae

Male : Vadivelum mayilum thunai
Vadivelum mayilum thunai
Sol valamaar senthamilaal
Sandhamum kandhanai paada
Vadivelum mayilum thunai

Male : Natarajan arul baalan
Naan marai thozhum seelan
Natarajan arul baalan
Naan marai thozhum seelan
Thadam maevum pozhil soozhulum
Thanigai vaazhum parama gyaana gurubaran

Male : Vadivelum mayilum thunai
Sol valamaar senthamilaal
Sandhamum kandhanai paada
Vadivelum mayilum thunai

Male : Thamizh maalai thanai chooduvaan
Thamizh maalai thanai chooduvaan
Kondrai thalir maalai malar maalai
Japa maalaiyudan
Sandha thamizh maalai thanai chooduvaan
Kondrai thalir maalai malar maalai
Japa maalaiyudan
Sandha thamizh maalai thanai chooduvaan

Male : Thaaba migu veppu vaadhamidu
Pitha maana pini moithu udambodu

Male : Thaaba mighu veppu vaadhamidu
Pitta maana pini moithu udambodu
Saarum uyir thunba saagaramuzhandru
Saadhanai izhandhu varundhaa mun
Saarum uyir thunba saagaramuzhandru
Saadhanai izhandhu varundhaa mun
Thaalaiyalithida venumena thudhi
Paadarunaigiri naadhanazhaithida
Dhayavudan isaindhu arul mazhai pozhindhu

Male : Muthaitharu pathi thirunaghaiyena
Mudhaladi udaitha thazhaitha karunaiyai
Ninaindhu ninaindhu kavi malar thodutha

Male : Thamizh maalai thanai chooduvaan
Kondrai thalir maalai malar maalai
Japa maalaiyudan
Sandha thamizh maalai thanai chooduvaan

Male : Sattrae sarindha kuzhalae
Thuvala tharala vadam
Thuttrae asaiya kuzhaiyoosalaada…
Aa… aa…

Male : Sattrae sarindha kuzhalae
Thuvala tharala vadam
Thuttrae asaiya kuzhaiyoosalaada…
Aa… aa…
Thuvar kol seivaai
Nattrae nozhugha nadana singaara nadaiyazhaghin
Pottraerirukka thalai alangaaram purappattadhae
Thalai alangaaram purappattadhae
Thalai alangaaram purappattadhae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : ஆயர் கலைகள்
அறுவத்தினான்கினையும்
ம்ம்ம்….ம்ம்….ம்ம்….
ஏய உணர்விற்கும் எம் அன்னை
தூய உற்ப்பளிங்கு போல்வாள்
என் உள்ளத்தின் உள்ளே..ஏ…
இருப்பள்ளிங்கு வார திடர்…ஆஅ..

ஆண் : சிந்தனை செய் மனமே…
சிந்தனை செய் மனமே தினமே….ஏ…

ஆண் : சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை

ஆண் : சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே…..
மனமே…..ஏ…

ஆண் : செந்தமிழ்க்
கருள் ஞான தேசிகனை
மெய் ஞான தேசிகனை…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…

ஆண் : செந்தமிழ்க்
கருள் ஞான தேசிகனை….. செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை

ஆண் : சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே…..
மனமே…ஏ…

ஆண் : சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை…
ஈ……ஈ…..ஈ…..ஈ……ஈ…….

ஆண் : சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க
நெறி தனை மறந்தனை
சமரச சன்மார்க்க
நெறி தனை மறந்தனை

ஆண் : அந்தகன் வரும் போது
அவனியில் யார் துணை
அந்தகன் வரும் போது
அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவண பவ
குகனை

ஆண் : சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே…..
மனமே……ஏ…

ஆண் : வடிவேலும் மயிலும் துணை…
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை…

ஆண் : நடராஜன் அருள் பாலன்
நான் மறை தொழும் சீலன்
நடராஜன் அருள் பாலன்
நான் மறை தொழும் சீலன்
தடம் மேவும் பொழில் சூழும்
தணிகை வாழும் பரமஞான
குருபரன்

ஆண் : வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை…

ஆண் : தமிழ் மாலை தனைச் சூடுவான்
தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச்
சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச்
சூடுவான்

ஆண் : தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மான பிணி மொய்த்து உடம்போடு

ஆண் : தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளையளித்திட வேணுமெனத் துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை
பொழிந்து

ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த

ஆண் : தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச்
சூடுவான்

ஆண் : சற்றே சரிந்த குழலே
துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட… ..
ஆ… ஆ…ஆஅ….

ஆண் : சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட…….
ஆ… ஆ…ஆஅ….
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார
நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம்
புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே…
தலையலங்காரம் புறப்பட்டதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here