Singer : S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Haaa..aaa..aaa

Female : Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi
Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi
Mangatha ponnae
Mangatha ponnae
Un vaai mutham ondraale
Maradha inbangal serppayadi
Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi

Female : Vaadadha roja un maeni
Vaadadha roja un maeni
Thulli aadathae va chinna raani
Poovaana paadham novadha podhum
Punnaagi en nenjam vaadum
Paaraalum maamannar maar meedhilae
Nee seerada vaaraai sendhenae
Indha paaraalum maamannar maar meedhilae
Nee seerada vaaraai sendhenae

Female : Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi

Female : Sevvalli kai vannam kaatti ….haaa.aaa
Sevvalli kai vannam kaatti
Engal sindhai ellam inbamootti
Nee aadathae kannae yaaryaenum unnai
Kandaalum aagathu maane
Anbennum aanandha poongaavilae
Nee pan paada vaaraai sendhenae
Engal anbennum aanandha poongaavilae
Nee pan paada vaaraai sendhenae

Female : Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi

Female : Singara kannae
Un thaen oorum sollaalae
Theeradha thunbangal theerpaayadi

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ.

பெண் : சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே
உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : வாடாத ரோஜா உன் மேனி
துள்ளி ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்

பெண் : பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
இந்தப் பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே

பெண் : சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ..ஹா..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி
எங்கள் சிந்தை எல்லாம் இன்பமூட்டி
நீ ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே
நீ பண் பாட வாராய் செந்தேனே
எங்கள் அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே
நீ பண் பாட வாராய் செந்தேனே

பெண் : சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : சிங்காரக் கண்ணே
உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here