Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Male : Siraiyinil seethai thavam seigiraal
Vizhiyinil indru edhai solgiraal
Siragilaiyaa nee parpatharukku
Uravilaiyaa unnai anaipathruku

Male : Siraiyinil seethai thavam seigiraal
Vizhiyinil indru edhai solgiraal

Female : Engal veettu thendralukku valaikaappu
Nandhavana poongodikku malarkaappu
Muthuk kuliththaale naalai
Mutham koduppalae
Moovulagai aala oru mannan pirappaanae

Male : Kanmaniye ennuyirai
Unnidam vaithaenae
Kanngalilae neer mazhai yaeno
Un kulam kaapaenea

Male : Siraiyinil seethai thavam seigiraal
Vizhiyinil indru edhai solgiraal

Male : Thangai petra singathirkku
Thanga thottilthaan
Engal illam enguengum ini
Pongum inbamthaan
Natchithara thoranangal vairapandhal melae
Annan tharum seethanangal maanikkangal thane

Male : Vensirayil vantha magan
Geethaiyai sonnanae
Venmathiyae un maganum
Un vithi Velvaanae

Male : Siraiyinil seethai thavam seigiraal
Vizhiyinil indru edhai solgiraal
Siragilaiyaa nee parpatharukku
Uravilaiyaa unnai anaipathruku

Male : Siraiyinil seethai thavam seigiraal
Vizhiyinil indru edhai solgiraal….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்
சிறகில்லையா நீ பறப்பதற்கு
உறவில்லையா உன்னை அணைப்பதற்கு

ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்

பெண் : எங்கள் வீட்டு தென்றலுக்கு வளைக்காப்பு
நந்தவன பூங்கொடிக்கு மலர்காப்பு
முத்துக் குளித்தாளே நாளை
முத்தம் கொடுப்பாளே
மூவுலகை ஆள ஒரு மன்னன் பிறப்பானே

ஆண் : கண்மணியே என்னுயிரை
உன்னிடம் வைத்தேனே
கண்களிலே நீர் மழை ஏன்
உன் குலம் காப்பேனே
சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்

பெண் : தங்கை பெற்ற சிங்கத்திற்கு
தங்கத் தொட்டில்தான்
எங்கள் இல்லம் எங்கெங்கும் இனி
பொங்கும் இன்பம்தான்
நட்சத்திர தோரணங்கள் வைரப்பந்தல் மேலே
அண்ணன் தரும் சீதனங்கள் மாணிக்கங்கள் தானே

ஆண் : வெஞ்சிறையில் வந்த மகன்
கீதையை சொன்னானே
வெண்மதியே உன் மகனும்
உன் விதி வெல்வானே

ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்
சிறகில்லையா நீ பறப்பதற்கு
உறவில்லையா உன்னை அணைப்பதற்கு

ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here