Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Sivagaami aada vanthaal
Nadarajar enna seivaar
Sivagaami aada vanthaal
Nadarajar enna seivaar
Nadamaadi paarkattumae
Enthan udanaadi paarkkattumae

Male : Thookkiya kaalai konjam
Keezhae vaiththaal
Ingu paakkiyai naanaaduvaen

Male : Thookkiya kaalai konjam
Keezhae vaiththaal
Ingu paakkiyai naanaaduvaen
Female : Antha paakkiyam naan kaanuvaen

Male : Nadarajanaa
Female : ………………
Male : Illai sivagaamiyaa
Female : ………………

Female : Sivagaamiyaa
Female : ………………
Female : illai ndarajanaa
Female : …………….

Male : Kaalgal nadamaadinaal
Vettri yaar kaanuvaar
Kaalgal nadamaadinaal
Vettri yaar kaanuvaar

Male : Sivagaami aada vanthaal
Nadarajar enna seivaar
Sivagaami aada vanthaal
Nadarajar enna seivaar
Nadamaadi paarkkattumae
Enthan udanaadi paarkkattumae

Male : Raththinagiri vaazhum saththiyamae
Ponnampalamae enakku un palamae
Raththinagiri vaazhum saththiyamae
Ponnampalamae enakku un palamae

Female : Siththira sivagaami aaduthal pol neeyum
Aadalundo thillai nadaraja
Aadalundo thillai nadaraja

Female : Paattum bharathamum koottum sabhaithanil
Salangaiyin oli konjuthu
Paattum bharathamum koottum sabhaithanil
Salangaiyin oli konjuthu

Male : Aadum ilaingan kalaiyin perumai
Ilangai varai ketkuthu
Aadum ilaingan kalaiyin perumai
Ilangai varai ketkuthu

Female : Poovin kodi idaiyum
Suvai thaenin thirumozhiyum
Paruvam kulungum udaimai
Paavaiyen maeniyin kalaiyithu
Paavaiyen maeniyin kalaiyithu

Female : Sivagaami aada vanthaal
Nadarajar enna seivaar
Nadamaadi paarkkattumae
Enthan udanaadi paarkkattumae

Female : ………………..

Male : Aaduvaar enbathanaal aadavar endraar
Aadaatha pathumai endru paavaiyar endraar
Aaduvaar enbathanaal aadavar endraar
Aadaatha pathumai endru paavaiyar endraar

Female : Maanidam kaalaithaaan aada varumo
Maanguyil poongural kooda varumo
Maanidam kaalaithaaan aada varumo
Maanguyil poongural kooda varumo

Male : Idam paarththu valam pogum kaalgalil
Patham podum madhayaanai nadanam

Female : ………………..

Male : Naadhamum bharathamum saernthavan naayagan
Aano penno avan

Male : ……………..

Male : Poovaadum kuzhalaalai
Pugalodu naan vella
Nadamidum idam idhu sidhamparam

Female : ……………….

Male : Maththala nandhiyin magan naan

Male : ………………….

Male : Thaththuva vaarisu sivan naan

Female : …………

Male : Aadidum pennae

Male : ……………….

Male : Naadagam enna

Female : ………………

Male : Manathinil enna

Male : ……………….

Male : Thavaruvathenna

Female : ………………….

Male : Mayakkamaa

Female : ……………..

Male : Kalakkamaa

Male : ……………….

Male : Kanakkilae

Female : ……………..

Male : Kuzhappamaa

Male : ……………..
Female : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சிவகாமி ஆட வந்தால்
நடராஜர் என்ன செய்வார்
சிவகாமி ஆட வந்தால்
நடராஜர் என்ன செய்வார்
நடமாடி பார்க்கட்டுமே
எந்தன் உடனாடி பார்க்கட்டுமே

ஆண் : தூக்கியக் காலை கொஞ்சம்
கீழே வைத்தால்
இங்கு பாக்கியை நானாடுவேன்

ஆண் : தூக்கியக் காலை கொஞ்சம்
கீழே வைத்தால்
இங்கு பாக்கியை நானாடுவேன்
பெண் : அந்த பாக்கியம் நான் காணுவேன்

ஆண் : நடராஜனா
பெண் : …………………
ஆண் : இல்லை சிவகாமியா
பெண் : …………………

பெண் : சிவகாமியா
பெண் : …………………
பெண் : இல்லை நடராஜனா
பெண் : …………………

ஆண் : கால்கள் நடமாடினால்
வெற்றி யார் காணுவார்…..
கால்கள் நடமாடினால்
வெற்றி யார் காணுவார்…..

ஆண் : சிவகாமி ஆட வந்தால்
நடராஜர் என்ன செய்வார்
சிவகாமி ஆட வந்தால்
நடராஜர் என்ன செய்வார்
நடமாடி பார்க்கட்டுமே
எந்தன் உடனாடி பார்க்கட்டுமே

ஆண் : ரத்தினகிரி வாழும் சத்தியமே
பொன்னம்பலமே எனக்கு உன் பலமே
ரத்தினகிரி வாழும் சத்தியமே
பொன்னம்பலமே எனக்கு உன் பலமே

பெண் : சித்திர சிவகாமி ஆடுதல் போல் நீயும்
ஆடலுண்டோ தில்லை நடராஜா
ஆடலுண்டோ தில்லை நடராஜா

பெண் : பாட்டும் பரதமும் கூட்டும் சபைதனில்
சலங்கையின் ஒலி கொஞ்சுது
பாட்டும் பரதமும் கூட்டும் சபைதனில்
சலங்கையின் ஒலி கொஞ்சுது

ஆண் : ஆடும் இளைஞன் கலையின் பெருமை
இலங்கை வரை கேட்குது
ஆடும் இளைஞன் கலையின் பெருமை
இலங்கை வரை கேட்குது

பெண் : பூவின் கொடி இடையும்
சுவைத் தேனின் திருமொழியும்
பருவம் குலுங்கும் உடைமை
பாவையென் மேனியின் கலையிது
பாவையென் மேனியின் கலையிது

பெண் : சிவகாமி ஆட வந்தால்
நடராஜர் என்ன செய்வார்…….
நடமாடி பார்க்கட்டுமே
எந்தன் உடனாடி பார்க்கட்டுமே

பெண் : ………………………..

ஆண் : ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்
ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்

பெண் : மானிடம் காளைதான் ஆட வருமோ
மாங்குயில் பூங்குரல் கூட வருமோ
மானிடம் காளைதான் ஆட வருமோ
மாங்குயில் பூங்குரல் கூட வருமோ

ஆண் : இடம் பார்த்து வலம் போகும் கால்களில்
பதம் போடும் மதயானை நடனம்

பெண் : ……………………………..

ஆண் : நாதமும் பரதமும் சேர்ந்தவன் நாயகன்
ஆணோ பெண்ணோ அவன்

ஆண் : …………………………

ஆண் : பூவாடும் குழலாளை
புகழோடு நான் வெல்ல
நடமிடும் இடம் இது சிதம்பரம்

பெண் : …………………………….

ஆண் : மத்தள நந்தியின் மகன் நான்

ஆண் : …………………………

ஆண் : தத்துவ வாரிசு சிவன் நான்

பெண் : …………………

ஆண் : ஆடிடும் பெண்ணே

ஆண் : ………………………..

ஆண் : நாடகம் என்ன

பெண் : ………………………..

ஆண் : மனதினில் என்ன

ஆண் : ………………………..

ஆண் : தவறுவதென்ன

பெண் : ………………………….

ஆண் : மயக்கமா

பெண் : ………………….

ஆண் : கலக்கமா

ஆண் : ………………………

ஆண் : கணக்கிலே

பெண் : ……………………..

ஆண் : குழப்பமா……

ஆண் : ……………………………………
பெண் : …………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here