Singers : P. Unnikrishnan and Swarnalatha

Music by : Deva

Female : Solak kaattu paadhaiyla…
Ae… ae………….

Female : Sola kaattu paadhaiyla
Vandi otti pora machaan
Sodi kuyil paadum paattu
Kaadhil kekkudhaa

Female : Naan paadum paattukku
Badhil irukkaa

Male : Em paattu veesura kaathu
Nee kaathula aadura naathu
Adi neeyaa pottikku sari sodi
Adi podi nee verum vaayaadi

Male : Sola kaattu paadhaiyla…
Ae… ae…

Female : Vaigai aathu thanni
Paiya paayum ninnu
Ponnu velaiyum enga mannu
Paakka aayiram kannu oo…

Chorus : Ooo…

Male : Aana katti uzhudhu
Aadi maasam vedhachu
Aayiram peru aruvada senju
Enga oorukku paeru oo…

Female : Enga oora chuthi maramellaam
Kuyilu koottam paadum

Male : Enga odakkulla maramellaam
Paattukku thaalam podum

Female : Sala salakkum aathu thanni
Silu silunnu paattu padikkum

Male : Kala kalakkum karumbu chola
Dhenam pudhusaa paattu edukkum

Chorus : Ooo..oo. ooo..ooo.

Female : Sola kaattu paadhaiyla…
Ae… ae…

Female Chorus : Kattaana mayilu
Machaana thaedudhu

Chorus : Hoi hoi hoi
Ohoho hoi
Hoi hoi hoi ohoho hoi

Female Chorus : Machaanin paarva
Em maela paayudhu

Chorus : Hoi hoi hoi
Ohoho hoi
Hoi hoi hoi ohoho hoi

Male Chorus : Pollaadha nokkam undaagudhu
Kalyaana aasaiyil thindaadudhu

Female Chorus : Aalaana paruthi
Thaanaaga vedikkum
Kalyaana manasu thaanaaga pazhukkum

Female : Singam puliya kandaa
Morachi nippaa ponnu
Thekkucheema pera kaelu
Veeram velanja mannu oo oo…

Chorus : Ooo ..ooo…

Male : Kambeduthu nippaan
Enga ooru aalu
Vellakkaaran bayandhu oduna
Kadhaiya konjam kaelu oo…oo

Female : Enga aathaa kuduthadhu
Thaai paalu
Eppavum padippen paattu

Male : Enga appan kuduthadhu
Thamizh paalu
Eppavum nelaikkum yem paattu

Female : Naan parambaraiyaa paattukkaari
Vevaram ulla gettikkaari

Male : Pannapuram paattukkaaran
Paattula naan gettikkaaran

Chorus : Oo…oo….ooo…ooo……

Male : Sola kaattu paadhaiyla
Paattu katti paadum kuyilae
Naanum kooda paadum paattu
Kaadhil kaekkudhaa
Naan paadum paattukku badhil irukkaa

Female : Um paattu veesura kaathu
Naan kaatthula aadura naathu

Female : Ada naanaa pottikku sari sodi
Em maamaa naan verum vaayaadi

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………

பெண் : சோளக் காட்டு பாதையில
வண்டி ஓட்டி போற மச்சான்
சோடிக் குயில் பாடும் பாட்டு
காதில் கேக்குதா

பெண் : நான் பாடும் பாட்டுக்கு
பதில் இருக்கா

ஆண் : எம் பாட்டு வீசுற காத்து
நீ காத்துல ஆடுற நாத்து
அடி நீயா போட்டிக்கு சரி சோடி
அடி போடி நீ வெறும் வாயாடி

ஆண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………

பெண் : வைகை ஆத்துத் தண்ணி
பையப் பாயும் நின்னு
பொன்னு வெளையும் எங்க மண்ணு
பாக்கணும் ஆயிரம் கண்ணு ஓஓ…..

குழு : ஓ……ஓஓ……

ஆண் : ஆன கட்டி உழுது
ஆடி மாசம் வெதச்சு
ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு
எங்க ஊருக்குப் பேரு ஓ……

பெண் : எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம்
குயிலுக் கூட்டம் பாடும்

ஆண் : எங்க ஓடக்குள்ள மரமெல்லாம்
பாட்டுக்குத் தாளம் போடும்

பெண் : சல சலக்கும் ஆத்துத் தண்ணி
சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்

ஆண் : கல கலக்கும் கரும்புச் சோல
தெனம் புதுசா பாட்டு எடுக்கும்

குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ….

பெண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………

பெண் குழு : கட்டான மயிலு
மச்சானத் தேடுது

குழு : ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்

பெண் குழு : மச்சானின் பார்வ
எம் மேல பாயுது

குழு : ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்

ஆண் குழு : பொல்லாத நோக்கம் உண்டாகுது
கல்யாண ஆசையில் திண்டாடுது

பெண் குழு : ஆளான பருத்தி
தானாக வெடிக்கும்
கல்யாண மனசு தானாக பழுக்கும்

பெண் : சிங்கம் புலியக் கண்டா
மொறைச்சு நிப்பா பொண்ணு
தெக்குச்சீம பேரக் கேளு
வீரம் வெளஞ்ச மண்ணு ஓ……ஓஓ…..

குழு : ஓ……ஓஓ……

ஆண் : கம்பெடுத்து நிப்பான்
எங்க ஊரு ஆளு
வெள்ளக்காரன் பயந்து ஓடுன
கதையக் கொஞ்சம் கேளு ஓ……ஓஓ…..

பெண் : எங்க ஆத்தா குடுத்தது
தாய்ப் பாலு
எப்பவும் படிப்பேன் பாட்டு

ஆண் : எங்க அப்பன் குடுத்தது
தமிழ்ப் பாலு
எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு

பெண் : நான் பரம்பரையா பாட்டுக்காரி
வெவரம் உள்ள கெட்டிக்காரி

ஆண் : பண்ணபுரம் ஊருக்காரன்
பாட்டுல நான் கெட்டிக்காரன்

குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ….

ஆண் : சோளக் காட்டு பாதையில
பாட்டு கட்டிப் பாடும் குயிலே
நானும் கூட பாடும் பாட்டு
காதில் கேக்குதா
நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா

பெண் : உம் பாட்டு வீசுற காத்து
நான் காத்துல ஆடுற நாத்து

பெண் : அட நானா போட்டிக்கு சரி சோடி
எம் மாமா நான் வெறும் வாயாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here