Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Mmm…mmm…mmm…
Ohoo…oohoo..oooo…
Ohoo…oohoo..oooo…

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae

Male : Vandhaarai vaazhai vaikkum
Senthamizhar naadu
Vaththaadha paatu chelvam
Vaazhnthidum veedu

Male : Thennaattu graamam engum
Thendral ennum kaatru
Thenmaangu paadi chellum
Thaalamum pottu

Male : Yeththam ittu paada
Paattum irukku
Yeru ketti paada
Paattum irukku
Naathu nattu paada
Paattum irukku
Paattu thaanae paattan
Soththu namakku
Innaalum ennalum namm sellvangal..oo

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..

Chorus : ………………………….

Male : Sevvaanam bhoomi ellam
Nall varavu koorum
Sangeetham paadikondu
Naan varum neram

Male : Sillendru vaadai vandhu
Ennai thottu odum
Singaara-cholai ennmel
Poo mazhai thoovum

Male : Megam indha ooril
Mannil varudhu
Moham konda mannai
Muththam iduthu
Muththam kondadhaalae
Muththu varudhu
Mottukkalai paarthaal
Mettu varudhu
Sittuppol poonchittuppol
Enn ennangal..oo

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven

Male : Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே

ஆண் : வந்தாரை வாழ
வைக்கும் செந்தமிழர் நாடு
வத்தாத பாட்டுச் செல்வம்
வாழ்ந்திடும் வீடு

ஆண் : தென்னாட்டு கிராமம்
எங்கும் தென்றல் எனும் காற்று
தெம்மாங்கு பாடிச் செல்லும்
தாளமும் போட்டு

ஆண் : ஏத்தம் இட்டுப் பாட
பாட்டும் இருக்கு ஏரு கட்டி
பாட பாட்டும் இருக்கு நாத்து
நட்டுப் பாட பாட்டும் இருக்கு
பாட்டுத்தானே பாட்டன்
சொத்து நமக்கு இந்நாளும்
எந்நாளும் நம் செல்வங்கள்

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே

குழு : …………………………

ஆண் : செவ்வானம் பூமியெல்லாம்
நல்வரவு கூறும் சங்கீதம் பாடி
கொண்டு நான் வரும் நேரம்

ஆண் : சில்லென்று வாடை
வந்து என்னைத் தொட்டு
ஓடும் சிங்காரச்சோலை
என் மேல் பூ மழைத் தூவும்

ஆண் : மேகம் இந்த ஊரில்
மண்ணில் வருது மோகம்
கொண்ட மண்ணை முத்தமிடுது
முத்தம் கொண்டதாலே
முத்து வருது மொட்டுகளை
பார்த்தால் மெட்டு வருது
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்
என் எண்ணங்கள் ஓஓ

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்

ஆண் : சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here