Singer : Ghandasala

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Soodhaadi maandhargalin
Suga vaazhvum oru naalil ..aaaa
Paadhaalam pogumenal
Paar arindha unmai andro

Male : Solla mudiyaadha thunba kadhai
Soodhaadi manidharin soga kadhai
Solla mudiyaadha thunba kadhai
Soodhaadi manidharin soga kadhai
Nalla manidharum vanjagaragi
Kalla vealigal seidha kadhai
Nalla manidharum vanjagaragi
Kalla vealigal seidha kadhai
Silar kollai laabathil konda mogathaal
Ulladhum izhandhu uru kulaindha kadhai

Male : Solla mudiyaadha thunba kadhai
Soodhaadi manidharin soga kadhai

Male : Andha naalilae panja paandavar
Arasu urimaiyai izhandhadhum..aaaaa
Andha naalilae panja paandavar
Arasu urimaiyai izhandhadhum
Azhagu paanjaali ammaiyaarudan
Anaivarum kaattil alaindhadhum

Male : Solla mudiyaadha thunba kadhai
Soodhaadi manidharin soga kadhai

Male : Anbu maelidum nalan thamayandhi
Allal sumandhu varunthiyathum…aaaa
Anbu maelidum nalan thamayandhi
Allal sumandhu varunthiyathum
Ariya kaadhalai piriya nernthathum
Aadhaaram izhandhadhum soodhaattathaale

Male : Solla mudiyaadha thunba kadhai
Soodhaadi manidharin soga kadhai

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : சூதாடி மாந்தர்களின்
சுக வாழ்வும்…ஒரு நாளில் ..ஆஅ…ஆஅ
ஒரு நாளில் பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை
சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை

ஆண் : அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்…ஆஅ..ஆ
அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை

ஆண் : அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here