Singers : Shreya Ghoshal and Karthik Raja

Music by : Karthik Raja

Chorus : ……………………………

Female : Solla vaarththaigal illai
Sollaamal kaadhalum illai
Aasai vandhu kayiru katti
Azhaikkiradhae uyirae

Male : Oh…pesa nyaabagam illai
Pesaamal pogavum illai
Enna seiya yedhu seiya
Ullam kidandhu alaigiradhae

Female : Kanavaa kanavaa
En aasai kanavaa
Serndhu konden
Idhayam thudikkindradhae

Male : Kanavaa kanavaa
Idhu kaadhal kanavaa
Killik konden
Enakkum valikkiradhae

Female : Solla vaarththaigal illai
Sollaamal kaadhalum illai
Aasai vandhu kayiru katti
Azhaikkiradhae uyirae

Male : Ohoo…ooohoo…
Female : Ohoo…oooo…ooo…

Male : Unnai vilagum ovvoru nodiyum
Unnai nerungugiren
Unnai virumbum aththanai ganamum
Ennil thadhumbugiren

Male : Aaahaa unnai vilagum ovvoru nodiyum
Unnai nerungugiren
Unnai virumbum aththanai ganamum
Ennil thadhumbugiren

Male : Nesikkiren unnai
Ennai ariyaamalae
Yosikkiren idhaiththaan
Naanum puriyaamalae

Male : Nenjodu kalagam theeraadhadaa
Anbaana ulagam kai serumaa
Kannorangal kolla
Pudhu minsaarangal sella
Innum enna solla
Naan ennai thandhen mella

Male : Solla vaarththaigal illai
Sollaamal kaadhalum illai
Aasai vandhu kayiru katti
Azhaikkiradhae uyirae

Female : Kangal thirandhu kannimai thirandhu
Kangal kalandhadhenna
Ennai marandhu unnaiyum marandhu
Uyir karaindhadhenna

Female : Oh… ullam kadandhu
Ulladhai kadandhu
Vandha unarvu enna
Nenjai alandhu nesaththai alandhu
Nindru nilaiththadhenna

Female : Kodugalai inaiththaal
Kolam uruvaagumae
Inaiththidavae nalla
Kaalam uruvaagumae

Female : Vinnodu dhuruvam serndhidumae
Unnodu idhayam kalandhidumae
Anbae anbae endru
Unnai thaalaththum naal indru
Aagaayamum indru
Malar pooththoovumae andru

Female : Yaaro nenjukkul vandhu
Oru latchcham violingalai
Mella mella isaipadhu pol
Irukkiradhae anbae

Female : Kanavaa kanavaa
En aasai kanavaa
Serndhu konden
Idhayam thudikkindradhae

Male : Yaaro nenjukkul vandhu
Oru latchcham violingalai
Mella mella ragaththoda isaipadhu pol
Irukkiradhae …ae…..

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : கார்த்திக் ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : …………………

பெண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

ஆண் : ஓ பேச ஞாபகம்
இல்லை பேசாமல் போகவும்
இல்லை என்ன செய்ய ஏது
செய்ய உள்ளம் கிடந்து
அலைகிறதே

பெண் : கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே

ஆண் : கனவா கனவா
இது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன்
எனக்கும் வலிக்கிறதே

பெண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

ஆண் : ஓஹோ
ஓஓஹோ
பெண் : ஓஹோ
ஓஓ ஓஓ

ஆண் : உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்

ஆண் : ஆஹா உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்

ஆண் : நேசிக்கிறேன்
உன்னை என்னை
அறியாமலே யோசிக்கிறேன்
இதைத்தான் நானும்
புரியாமலே

ஆண் : நெஞ்சோடு கலகம்
தீராததா அன்பான உலகம்
கை சேருமா கண்ணோரங்கள்
கொல்ல புது மின்சாரங்கள்
செல்ல இன்னும் என்ன சொல்ல
நான் என்னைத் தந்தேன் மெல்ல

ஆண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

பெண் : கண்கள் திறந்து
கண்ணிமை திறந்து
கண்கள் கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும்
மறந்து உயிர் கரைந்ததென்ன

பெண் : ஓ உள்ளம் கடந்து
உள்ளத்தை கடந்து வந்த
உணர்வு என்ன நெஞ்சை
அளந்து நேசத்தை அளந்து
நின்று நிலைத்ததென்ன

பெண் : கோடுகளை
இணைத்தால் கோலம்
உருவாகுமே இணைத்திடவே
நல்ல காலம் உருவாகுமே

பெண் : விண்ணோடு
துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம்
கலந்திடுமே அன்பே
அன்பே என்று உன்னை
தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் இன்று மலர்
பூத்தூவுமே அன்று

பெண் : யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல இசைப்பது போல்
இருக்கிறதே அன்பே

பெண் : கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே

ஆண் : யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல ராகத்தோட
இசைப்பது போல்
இருக்கிறதே ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here