Singers : P. Susheela and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Sollaathae
Female : Haang….
Male : Sollaathae yaarukkum sollaathae
Nee sorkkaththai kaanaamal sellaathae

Male : Sollaathae yaarukkum sollaathae
Nee sorkkaththai kaanaamal sellaathae

Female : Ragasiya uravu adhisaya kanavu
Ragasiya uravu adhisaya kanavu
Iravugal thorum ilamaiyin raagam
Vidiyum varaiyil padippom

Male : Sollaathae
Male : Haah
Female : Yaarukkum sollaathae
Male : Nee sorkkaththai kaanaamal sellaathae

Male : Vaanavil ondru medhuvaaga bhoomiyil vanthu
Penn mayil endru kangalil nindru pesuvathenna vinthai
Female : Ilangkadhal maadhu unai kaanupothu
Oru vaarththaiyaethu vizhithaanae thoodhu

Male : Idhu nayana kavithai kannae
Female : Adhil payilum kadhigal enna

Male : Sollaathae yaarukkum sollaathae
Nee sorkkaththai kaanaamal sellaathae
Male : Ragasiya uravu
Female : Adhisaya kanavu
Male : Iravugal thorum ilamaiyin raagam
Female : Vidiyum varaiyil padippom

Female : Haei sollaathae
Male : Haah
Female : Yaarukkum sollaathae
Male : Nee sorkkaththai kaanaamal sellaathae

Male : Aaradi koonthal azhagaaga aaduthu oonjal
Poocharam soodi kaattrinil aadi poguthu melum keezhum
Female : Anal patta thegam viral patta neram
Punal endru maarum idhu enna maayam

Male : Suga mazhaiyil nanaiya vendum
Female : Iru uyirgal iniya vendum

Male : Sollaathae
Female : Haah
Male : Yaarukkum sollaathae
Female : Sorkkaththai kaanaamal sellaathae
Male : Ragasiya uravu
Female : Adhisaya kanavu
Both : Iravugal thorum ilamaiyin raagam
Vidiyum varaiyil padippom

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : சொல்லாதே…
பெண் : ஹாங்…..
ஆண் : சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

பெண் : ரகசிய உறவு அதிசய கனவு
ரகசிய உறவு அதிசய கனவு
இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்

பெண் : சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆண் : வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து
பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை
பெண் : இளங்காதல் மாது உனைக் காணும்போது
ஒரு வார்த்தையேது விழிதானே தூது

ஆண் : இது நயன கவிதை கண்ணே
பெண் : அதில் பயிலும் கதைகள் என்ன

ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ஆண் : ரகசிய உறவு
பெண் : அதிசய கனவு
ஆண் : இரவுகள் தோறும் இளமையின் ராகம்
பெண் : விடியும் வரையில் படிப்போம்

பெண் : ஹேய் சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே..

பெண் : ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம்
காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து
ஆண் : மணல் மீது நானும் மடி மீது நீயும்
தனியாக நானும் கதை பேச வேண்டும்
பெண் : அதில் உலகை மறக்க வேண்டும்
ஆண் : ஒரு நினைவில் மிதக்க வேண்டும்

பெண் : ஹேய் சொல்லாதே
ஆண் : ஹாஹ்
பெண் : யாருக்கும் சொல்லாதே
ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே..

ஆண் : ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல்
பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும்
பெண் : அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம்
புனல் என்று மாறும் இது என்ன மாயம்

ஆண் : சுக மழையில் நனைய வேண்டும்
பெண் : இரு உயிர்கள் இணைய வேண்டும்

ஆண் : சொல்லாதே
பெண் : ஹாஹ்
ஆண் : யாருக்கும் சொல்லாதே
பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ஆண் : ரகசிய உறவு
பெண் : அதிசய கனவு
இருவர் : இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here