Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Sollaamal theriya vendumae
Sollavum thanimai vendumae
Kan jaadai puriya vendumae
Yaarum kaanaamal sirikka vendumae

Female : Sollaamal theriya vendumae

Female : Oru murai paarthadhil
Uruvam nindradhu
Ullam muzhuvadhum
Mayakkam vandhadhu

Female : Oru murai paarthadhil
Uruvam nindradhu
Ullam muzhuvadhum
Mayakkam vandhadhu

Female : Maru murai kaanavae
Manadhum sendradhu
Mangaiyin aasaiyai
Naanam vendradhu

Female : Sollaamal theriya vendumae

Female : Aanandham indru dhaan
Aarambamaanadhu
Adharrkoru kaaranam
Yaaridam kaetpadhu

Female : Manadhil iruppadhu
Maraimugam aanadhu
Manadhil iruppadhu
Maraimugam aanadhu
Mounam sammadham
Mattrenna solvadhu?

Female : Sollaamal theriya vendumae

Female : Thaediya selvam
Kaigalil kidaithadhae
Thirunaal polavae
Oru naal malarndhadhu

Female : Paadiya yaavaiyum
Kavidhaiyil padithadhu
Paavai oruththi
Ezhuththinil vadithadhu

Female : Sollaamal theriya vendumae
Sollavum thanimai vendumae
Kan jaadai puriya vendumae
Yaarum kaanaamal sirikka vendumae

Female : Sollaamal theriya vendumae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது

பெண் : மறு முறை காணவே மனதும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது

பெண் : மனதில் இருப்பது மறைமுகமானது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : தேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது

பெண் : பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here