Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu
Female : Kannaalaththaanae intha kadhal valaruthu
Intha kadhal valaruthu

Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu
Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu
Both : Ho

Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu

Male : Moodi vachcha mottu poovukkulla
Vandu vanthaa vazhi kidaikkumaa
Female : Vandin idhzh mottil pattuvittaa
Mottin idhazh vittukodukkumae

Male : Oo…poonaikku maniya katturathu yaaru
Female : Ippadiyae irunthaa mudivenna kooru

Male : Pennin mana aazham
Arinthidum munnae
Irangida enakkum thayakkam
Female : Kaanthamathai kandaa
Irumbuthaanae
Inainthida varuvathu vazhakkam…haa haa

Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu
Female : Intha manasu thavikkuthu

Male : Dhinam dhinam unnai paakkayila
Manam vittu pesa thudikkiraen
Female : Ooru kadhai thaanae nadakkuthu
Ulla kadhai ulla muzhikkuthu

Male : Paakka varum munnae thunivathu irukkum
Female : Pakkam vantha pinnae vetkamathu thadukkum

Male : Sippikkullae muththa pola
Nenjukkulla kadhala
Moodi moodi vappathum yaeno
Female : Thondakkuzhi varaikkum
Alaiyena vaarththaiyum
Vanthu vanthu thirumputhu yaeno…ho ho….

Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu
Female : Kannaalaththaanae intha kadhal valaruthu
Intha kadhal valaruthu

Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu
Female : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu
Both : Ho

Male : Sollaamaththaanae
Both : Intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu
Intha manasu thavikkuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது…..
இருவர் : ஹோ……

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது

ஆண் : மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள
வண்டு வந்தா வழி கிடைக்குமா
பெண் : வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா
மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே

ஆண் : ஓ……பூனைக்கு மணிய கட்டுறது யாரு
பெண் : இப்படியே இருந்தா முடிவென்ன கூறு

ஆண் : பெண்ணின் மன ஆழம்……..
அறிந்திடும் முன்னே
இறங்கிட எனக்கும் தயக்கம்
பெண் : காந்தமதை கண்டா…
இரும்பது தானே
இணைந்திட வருவது வழக்கம்…ஹா ஹா…

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
பெண் : இந்த மனசு தவிக்குது

ஆண் : தினம் தினம் உன்னை பாக்கயில
மனம் விட்டு பேச துடிக்கிறேன்
பெண் : ஊரு கதை தானே நடக்குது
உள்ள கதை உள்ள முழிக்குது

ஆண் : பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பெண் : பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்

ஆண் : சிப்பிக்குள்ளே முத்த போல…
நெஞ்சுக்குள்ள காதல
மூடி மூடி வைப்பதும் ஏனோ
பெண் : தொண்டக்குழி வரைக்கும்…
அலையென வார்த்தையும்
வந்து வந்து திரும்புது ஏனோ…ஹோ ஹோ……

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது…..
இருவர் : ஹோ……

ஆண் : சொல்லாமத்தானே
இருவர் : இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here