Singers : S. Janki and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Sollaththaan ninaikkiraen
Ullaththaal thudikkiren
Vaai irunthum solvatharkku
Vaarthaiyindri thavikkiren

Male : Aaha sollaththaan ninaikkiraen

Female : Kaatril mithakkum pugai polae
Avan kanavil mithakkum ninaivugalae
Kaatril mithakkum pugai polae
Avan kanavil mithakkum ninaivugalae
Mana veedu avan thani veedu
Adhl pugunthaano engum nirainthaano

Male : Aa ha sollaththaan ninaikkiraen
Ullaththaal thudikkiren
Vaai irunthum solvatharkku
Vaarthaiyindri thavikkiren

Male : Kadhal enbathu mazhaiyaanaal
Aval kangal thaanae kaarmegam
Kadhal enbathu mazhaiyaanaal
Aval kangal thaanae kaarmegam
Neeraatta naan paaraatta
Aval varuvaalo illai marappaalo
Aval varuvaalo sugam tharuvaalo

Male : Aa ha sollaththaan ninaikkiraen

Female : Aasai ponguthu paal polae
Avan anal pol paarkkum paarvaiyilae
Aasai ponguthu paal polae
Avan anal pol paarkkum paarvaiyilae

Female : Kodhiththa manam konjam kulirum vitham
Avan anaippaano
Ennai ninaippaano
Avan anaippaano
Ennai ninaippaano aahaa

Whistle : ……………….

Male : Neril nindraal oviyamaai
En nenjil nindraal kaaviyamaai
Neril nindraal oviyamaai
En nenjil nindraal kaaviyamaai

Male : Naan paathi avalthaan paathi
Ena kalanthaalo kannil malarnthaalo
Nenjil kalanthaalo kannil malarnthaalo

Male : Aa haa sollaththaan ninaikkiraen
Female : Ullaththaal thudikkiren
Male : Vaai irunthum
Female : Solvatharkku
Both : Vaarthaiyindri thavikkiren….aa…..aa…..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் : காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

பெண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் : காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் : ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே

பெண் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ
என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே
என்னை நினைப்பானே ஆஹா

விசில் : ……………………….

ஆண் : நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்

ஆண் : நான் பாதி அவள் தான் பாதி
எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
பெண் : உள்ளத்தால் துடிக்கிறேன்
ஆண் : வாய் இருந்தும்
பெண் : சொல்வதற்கு
இருவர் : வார்த்தையின்றி தவிக்கிறேன்…ஆஅ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here