Singer : S. Janaki

Music by : S. A. Rajkumar

Lyrics by : R. Ravishankar

Female : Aa….aaraaroro
Aariraro aaraariro

Female : Sooriyanae
Kanna thodachchikka sooriyanae
Thooraththilae yaengi
Thavikkithu thaaimanamae

Female : Kallamillaatha pillai nilaa
Annaiyai theduthu
Kuttramillaatha petra manam
Sogaththil vaaduthu

Female : Sooriyanae
Kanna thodachchikka sooriyanae

Female : Vishamum thaayin kaipada
Amirtham aagumae
Un thaayin paalil vishamadaa
Enna siyuvaen

Female : Alli edukka aasaithaan
Theenda vithiyillaiyae
Muththam kodukka aasaithaan
Yogam enakkillaiyae
Nenjila theeuyum kannula neerum
Annai pettra varamo

Female : Sooriyanae
Kanna thodachchikka sooriyanae

Chorus : Aariro aariraariro
Aariro aaraaro

Female : Oorukkaaga nathiyundu
Nathikku thaayilla
Uyirukkaaga kaattrundu
Kaattrukku thaayilla

Female : Megam mazhaiyaa irangitta
Megam irupaththilla
Soodam koluththi mudinjathum
Soodam irupathilla
Ennuyiraaga kannmani vaazha
Unnil kalanthirupen

Female : Sooriyanae
Kanna thodachchikka sooriyanae
Thooraththilae yaengi
Thavikkithu thaaimanamae

Female : Kallamillaatha pillai nilaa
Annaiyai theduthu
Kuttramillaatha petra manam
Sogaththil vaaduthu

Female : Sooriyanae
Kanna thodachchikka sooriyanae….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : ஆர். ரவிசங்கர்

பெண் : ஆ…….ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ

பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மனமே

பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது

பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே

பெண் : விசமும் தாயின் கைப்பட
அமிர்தம் ஆகுமே
உன் தாயின் பாலில் விசமடா
என்ன செய்யுவேன்

பெண் : அள்ளி எடுக்க ஆசைதான்
தீண்ட விதியில்லையே
முத்தம் கொடுக்க ஆசைதான்
யோகம் எனக்கில்லையே
நெஞ்சில தீயும் கண்ணுல நீரும்
அன்னை பெற்றவரமோ

பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே

குழு : ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆராரோ

பெண் : ஊருக்காக நதியுண்டு
நதிக்கு தாயில்ல
உயிருக்காக காற்றுண்டு
காற்றுக்கு தாயில்ல

பெண் : மேகம் மழையா இறங்கிட்டா
மேகம் இருப்பதில்ல
சூடம் கொளுத்தி முடிஞ்சதும்
சூடம் இருப்பதில்ல
என்னுயிராக கண்மணி வாழ
உன்னில் கலந்திருப்பேன்

பெண் : சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மானமே

பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது

பெண் : சூரியனே….
கண்ணத்தொடச்சிக்க சூரியனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here