Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Sodhanai mel sodhanai
Podhumada saami
Sodhanai mel sodhanai
Podhumada saami
Vedhanai dhaan vaazhkai endraal
Thaangaadhu bhoomi
Vedhanai dhaan vaazhkai endraal
Thaangaadhu bhoomi

Male : Sodhanai mel sodhanai
Podhumada saami

Male : {Sondham oru kai vilangu
Nee pottadhu
Adhil bandham oru kaal vilangu
Naan pottadhu} (2)

Male : Sodhanai mel sodhanai
Podhumada saami

Male : {Adhaaram illai amma
Aarudhal solla
Naan avadhaaram illai amma
Thathauvam solla} (2)

Male : Parigaram thedi ini
Evvidam sella
Enakku adhigaramillai amma
Vanagam sella

Male : Oru naalum naan idhu pol
Azhudhavan alla
Andha thiru naalai magan koduthaan
Yaaridam solla

Male : Sodhanai mel sodhanai
Podhumada saami
Vedhanai dhaan vaazhkai endraal
Thaangaadhu bhoomi
Sodhanai mel sodhanai
Podhumada saami

Female : Mama kaanji pona
Bhoomi ellaam
Vaththaadha nadhiyai paathu
Aarudhal adaiyum
Andha nadhiyae kaanji poitaa
Thunbapadaravanga ellaam
Avanga kavalaiyai
Deivathukku kitta murai iduvaanga
Anaa antha deivamae kalangi ninnaa
Andha deivathukku yaaraala
Aarudhal solla mudiyum…(Dialogue)

Male : {Thaan aadavillai amma
Sadhai aadudhu
Adhu thandhai endrum
Pillai endrum vilaiyadhudhu} (2)

Male : Poovaaga vaithirundhen
Manam enbadhu
Adhil poo naagam
Pugundhu kondu uravendradhu

Male : Adi thaangum ullamidhu
Idi thaanguma
Idi pola pillai vandhaal
Madi thaangumaa

Male : Sodhanai mel sodhanai
Podhumada saami
Vedhanai dhaan vaazhkai endraal
Thaangaadhu bhoomi
Sodhanai mel sodhanai
Podhumada saami

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

ஆண் : {சொந்தம் ஒரு கை விலங்கு
நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு
நான் போட்டது} (2)

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

ஆண் : {ஆதாரம் இல்லையம்மா
ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா
தத்துவம் சொல்ல} (2)

ஆண் : பரிகாரம் தேடி இனி
எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா
வானகம் செல்ல

ஆண் : ஒரு நாளும் நான்
இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான்
யாரிடம் சொல்ல

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

பெண் : மாமா…
காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போய்ட்டா…
துன்பப் படுறவங்க எல்லாம்
அந்த கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா…
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்…..

ஆண் : {நானாட வில்லையம்மா
சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும்
விளையாடுது} (2)

ஆண் : பூவாக வைத்திருந்தேன்
மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு
உறவென்றது

ஆண் : அடி தாங்கும் உள்ளம் இது
இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால்
மடி தாங்குமா

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here