Singer : Sean Roldan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Arunraja Kamaraj

Male : Sottangalla solatura parva
Ammi vechu araikuthamma
Thattan pola methakura manasu
Kuttikaranam adikuthamma

Male : Cholakattu yana pola
Nenjukulla payuriye
Seeni mela eeya neeyum
Echi vaika meyuriyeee

Male : Pokka neeyum
Nellaa thoothuriyee yee yee
Kalli pala
Thena maathuriyee yee yee

Male : Vekka vanthaa neethan eeram
Veyilukku neeraaharam
Kummiruttil kodi koil
Deepam neethanee

Male : Alli thinga neethan saadham
Angayamman saami padham
Kappi kallu dhagam theekkum
Megam neethanee…

Male : Sutta mannu on kai alla
Sokka thangam aaneenee
Kittipulla neeyum thatta
Aeroplane ahh pooneenee

Male : Alli unna naa edukka
Athanaiyum on vaasam
Kakkathula aahaasam

Male : Ottu thinna ooram aadu
Othaasaikku yethu eedu
Thottu enna neeyum thookka
Kalam maaraatho

Male : Sontham unna sertha veedu
Sulli vacha maina koodu
Alli alli ootum thaaya
Kaadhal yenthathoo

Male : Mocha kotta pallu paatha
Velli vairam venaamee
Echi vachu neeyum thantha
Vellam agum ellaamee…

Male : Sippi muthu nee sirikka
Natchathiram kaiveesum
Mothathula paal vaasam

Male : Sottangalla solatura parva
Ammi vechu araikuthamma
Thattan pola methakura manasu
Kuttikaranam adikuthamma

Male : Cholakattu yana pola
Nenjukulla payuriye
Seeni mela eeya neeyum
Echi vaika meyuriyee

Male : Pokka neeyum
Nellaa thoothuriyee yee yee
Kalli pala
Thena maathuriyee yee yee…

பாடகர் : சீன் ரோல்டன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ்

ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண் : சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண் : பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…

ஆண் : வெக்க வந்தா நீதான் ஈரம்
வெயிலுக்கு நீராகாரம்
கும்மிருட்டில் கோடி கோயில்
தீபம் நீதானே

ஆண் : அள்ளி திங்க நீதான் சாதம்
அங்காயம்மன் சாமி பாதம்
கப்பி கல்லு தாகம் தீக்கும்
மேகம் நீதானே

ஆண் : சுட்ட மண்ணு உன் கை அள்ள
சொக்க தங்கம் ஆனேனே
கிட்டிபுள்ளா நீயும் தட்ட
ஏரோபிளேனா போனேனே

ஆண் : அள்ளி உன்ன நா எடுக்க
அத்தனையும் உன் வாசம்
கக்கத்துல ஆகாசம்

ஆண் : ஒட்டு தின்ன ஓரம் ஆடு
ஒத்தாசைக்கு ஏது ஈடு
தொட்டு என்ன நீயும் தூக்க
காலம் மாறாதோ

ஆண் : சொந்தம் உன்ன சேர்ந்த வீடு
சுள்ளி வச்ச மைனா கூடு
அள்ளி அள்ளி ஊட்டும்
தாய காதல் ஏந்தாத்தோ

ஆண் : மொச்சை கொட்ட பல்லு பாத்தா
வெள்ளி வைரம் வேணாமே
எச்சி வச்சு நீயும் தந்தா
வெல்லும் அகும் எல்லாமே…

ஆண் : சிப்பி முத்து நீ சிரிக்க
நட்சத்திரம் கைவீசும்
முத்ததுல பால் வாசம்

ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண் : சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண் : பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here