Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Sri raman varugindra paathai nindru
Srungaaram paadugiraal seedhai
Sri raman varugindra paathai nindru
Srungaaram paadugiraal seedhai

Male : Sri rangan paadugiraan geedhai ingu
Sridevi maarugiraal paadhai
Sri rangan paadugiraan geedhai ingu
Sridevi maarugiraal paadhai

Female : En uraiyai idhalaalae ezhuthuven vaa
Un uraiyai en vizhiyaal padikkalaam vaa
En uraiyai idhalaalae ezhuthuven vaa
Un uraiyai en vizhiyaal padikkalaam vaa

Female : Munnuraiyai ezhuthuvom muththamaaga
Mudivuraiyil mayanguvom moththamaaga

Male : Mayangaatha penmaiyae padhippurai
Adhan marupakkam aanmaiyin padhippurai
Mayangaatha penmaiyae padhippurai
Adhan marupakkam aanmaiyin padhippurai

Male : Poopola un meni pugazhurai
Naan pon pola kaappathae sirappurai
Naan pon pola kaappathae sirappurai

Female : Sri raman varugindra paathai nindru
Srungaaram paadugiraal seedhai

Female : Vidigindra varaiyilum aaivurai
Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai
Vidigindra varaiyilum aaivurai
Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai

Female : Appothu ezhuthuvom virivurai
Naam ippothu thodanguvom aninthurai

Male : Achchamum naanamum arivurai
Avai kaninthu suvai thedinaal karuththurai
Achchamum naanamum arivurai
Avai kaninthu suvai thedinaal karuththurai

Male : Aasaikku anai podum niraivurai
Adhu allinaal kuraiyaatha porulurai
Adhu allinaal kuraiyaatha porulurai

Female : Sri raman varugindra paathai nindru
Srungaaram paadugiraal seedhai
Male : Sri rangan paadugiraan geedhai ingu
Sridevi maarugiraal paadhai
Sri rangan paadugiraan geedhai ingu
Sridevi maarugiraal paadhai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை
ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை

பெண் : என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா
என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா

பெண் : முன்னுரையை எழுதுவோம் முத்தமாக
முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக

ஆண் : மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை
மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை

ஆண் : பூப்போல உன் மேனி புகழுரை
நான் பொன் போல காப்பதே சிறப்புரை
நான் பொன் போல காப்பதே சிறப்புரை……

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

பெண் : விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை
விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை

பெண் : அப்போது எழுதுவோம் விரிவுரை
நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை

ஆண் : அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை
அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை

ஆண் : ஆசைக்கு அணை போடும் நிறைவுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை….

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை
ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here