Singers : K. S. Chithra and Ilayaraja
Music by : Ilayaraja
Female : Sree raamanae unnai seethai thaedinaal
Gopaalanae unnai raadhai paadinaal
Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa
En valaiyal osai unnai valaithu podudhaa
Idhu thaan sugamo iraivan varamo
Female : Sree raamanae unnai seethai thaedinaal
Gopaalanae unnai raadhai paadinaal
Male : Neeyo gaanam vazhangidum vaani
Oho hoho ho oho hoho ho
Naano paadum thamizh isai thaenee
Oho hoho ho oho hoho ho
Naal thorum kaadhal aalaabanai
Nam vaazhvu kaaman aaraadhanai
En raagam thaalam neeyae
Sangeetham aagum vaazhvae
Idhu thaan sugamo iraivan varamo
Female : Sree raamanae unnai seethai thaedinaal
Male : Vaa kanmani pudhu vasantham kaanalaam
Female : Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa
Male : En kangal koorum vaarthai unakku ketkudhaa
Female : Idhu thaan sugamo iraivan varamo
Male : Vaa kanmani pudhu vasantham kaanalaam
Male : Lalaa lalaa lalaa aaa…
Ulagam yaavum uyirgalin thottam
Oho hoho ho oho hoho ho
Uyirgalil thaanae kaadhalin naattam
Oho hoho ho oho hoho ho
Female : Aagaasam thoovum senthaen mazhai
Aadhaaram aagum kaadhal kalai
Pan paadum penmai ingae
Kan thaedum kannan engae
Idhu thaan sugamo iraivan varamo
Male : Vaa kanmani pudhu vasantham kaanalaam
Female : Sree raamanae unnai seethai thaedinaal
Male : En kangal koorum vaarthai unakku ketkudhaa
Female : Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa
Male : Idhu thaan sugamo iraivan varamo
Female : Sree raamanae unnai seethai thaedinaal
Male : Laa laalalaa lala lalala laalalaa
Aa haaha haa…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
கோபாலனே உன்னை ராதை பாடினாள்
வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
கோபாலனே உன்னை ராதை பாடினாள்
ஆண் : நீயோ கானம் வழங்கிடும் வாணி
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
நானோ பாடும் தமிழ் இசைத் தேனீ
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
நாள் தோறும் காதல் ஆலாபனை
நம் வாழ்வு காமன் ஆராதனை
என் ராகம் தாளம் நீயே
சங்கீதம் ஆகும் வாழ்வே
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் : வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண் : வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண் : என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண் : இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண் : வா கண்மணி புது வசந்தம் காணலாம்
ஆண் : லலா லலா லலா ஆ…
உலகம் யாவும் உயிர்களின் தோட்டம்
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
உயிர்களில் தானே காதலின் நாட்டம்
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
பெண் : ஆகாசம் தூவும் செந்தேன் மழை
ஆதாரம் ஆகும் காதல் கலை
பண்பாடும் பெண்மை இங்கே
கண் தேடும் கண்ணன் எங்கே
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண் : வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் : என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண் : வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண் : இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் : லா லாலலா லல லலல லாலலா
ஆ ஹாஹ ஹா…