Singer : Ananthu

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Ae… sodalamaadappaa inge
Manusan yaarappaa
Kelvi oru kelvi
Pala naalaa irukke

Male : Ae… ethiri yaarappaa nge
Uravu yaarappaa
Saami ada saami
Perum paada irukke

Male : Neethi katha kettu valarnththu ethukku
Pallikalil paadam nooru ethukku
Panaththil ulage suzhalum poluthu
Karunai ethukku karumam ethukku

Male : Thiyaagiyarin veettil enna irukku
Varumaiyudan vasavum veruppum irukku
Manidha manamo puluththu kedakku
Paavam indha paasam mayangi kedakku

Male : Kaasu irukkum idame thirukkoyil
Mandhirangal ethukku verum vaayil
Saami irukkum idaththil ellaam
Undiyal valarnthirukku

Male : Perarivin mannan enraalum
Maanudaththin thozhan aanaalum
Kaasu kurainthaal thesu kuraiyum
Komanamum pagaiyaakum

Male : Veedu vaasal vantha pinne
Thevaigal theeraathe
Paasam anbe pothum endraal
Paiththiyam neethaane

Male : Kaadhal nesam natpu ellaam
Kaasidam jeyikkaathe
Paadai aeri pokum pothum
Panaththaasai pogaathe

பாடகர் : ஆனந்து

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : ஏ… சோடலமாடப்பா
இங்கே மனுசன் யாரப்பா
கேள்வி ஒரு கேள்வி
பல நாளா இருக்கே

ஆண் : ஏ… எதிர் யாரப்பா
இங்கே உறவு யாரப்பா
சாமி அட சாமி
பெரும் பாடா இருக்கே

ஆண் : நீதி கதை கேட்டு வளர்ந்தது எதுக்கு
பள்ளிகளில் பாடம் நூறு எதுக்கு
பணத்தில் உலகே சுழலும் போது
கருணை எதுக்கு கருமம் எதுக்கு

ஆண் : தியாகியரின் வீட்டில் என்ன இருக்கு
வருமையுடன் வசவும் வெறுப்பும் இருக்கு
மனித மனமோ புழுத்து கெடக்கு
பாவம் இந்த பாசம் மயங்கி கெடக்கு

ஆண் : காசு இருக்கும் இடமே திருக்கோயில்
மந்திரங்கள் எதுக்கு வெறும் வாயில்
சாமி இருக்கும் இடத்தில் எல்லாம்
உண்டியல் வளர்ந்திருக்கு

ஆண் : பேரறிவின் மன்னன் என்றாலும்
மானுடத்தின் தோழன் ஆனாலும்
காசு குறைந்தால் தேசு குறையும்
கோமணமும் பகையாகும்

ஆண் : வீடு வாசல் வந்த பின்னே
தேவைகள் தீராதே
பாசம் அன்பே போதும் என்றால்
பைத்தியம் நீதானே

ஆண் : காதல் நேசம் நட்பு எல்லாம்
காசிடம் ஜெயிக்காதே
பாடை ஏறி போகும் போது
பணத்தாசை போகாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here