Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Aa…aa…aa…aah…
Sulthan vanthaar
Sulthan vanthaar china bajar-u
Thunaikku oruthi kooda
Vanthaal Pesum gulsaar-u

Female : Sulthan potta sarigai
Sattai silk nijaar-u
Thudaippam pola perukkuchammaa
Adhaan bejaar-u

Female : Sulthan vanthaar
Sulthan vanthaar china bajar-u
Thunaikku oruthi kooda
Vanthaal Pesum gulsaar-u

Female : Navamanigal nirainjirukkum
Sulthan gajaanaa
Anna nadai nadakkum pengalukko
Palingu janaanaa

Female : Iravu pagal entha neram
Gaana bajaanaa gaanaa bajaanaa
Adhil iduppai vetti panam parippaal
Munvar sulthaana

Female : Sulthan vanthaar
Sulthan vanthaar china bajar-u
Thunaikku oruthi kooda
Vanthaal Pesum gulsaar-u

Female : Madhulam pazhampol idhazhil
Mayangi kidakkum navap-u
Than madiyil kidakkum pengalukku
Vidiya solvaar javap-u

Female : Matharukkum maddhuvukkumthaan
Varushamellaam kulaamu
Varushamellaam kulaamu
Than manjaththilae pengalukku
Poduvaaru salam-u

Female : Sulthan vanthaar
Sulthan vanthaar china bajar-u
Thunaikku oruthi kooda
Vanthaal Pesum gulsaar-u

Female : Sulthan vanthaar
Sulthan vanthaar china bajar-u

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ…ஆ….ஆ…ஆஹ்….
சுல்தான் வந்தார்
சுல்தான் வந்தார் சைனா பஜாரு
துணைக்கு ஒருத்தி கூட
வந்தாள் பேசும் குல்சாரு

பெண் : சுல்தான் போட்ட சரிகை
சட்டை சில்க் நிஜாரு
துடைப்பம் போல பெருக்குச்சம்மா
அதான் பேஜாரு

பெண் : சுல்தான் வந்தார்
சுல்தான் வந்தார் சைனா பஜாரு
துணைக்கு ஒருத்தி கூட
வந்தாள் பேசும் குல்சாரு

பெண் : நவமணிகள் நிறைஞ்சிருக்கும்
சுல்தான் கஜானா
அன்ன நடை நடக்கும் பெண்களுக்கோ
பளிங்கு ஜனானா

பெண் : இரவு பகல் எந்த நேரம்
கானா பஜானா கானா பஜானா
அதில் இடுப்பை வெட்டிப் பணம் பறிப்பாள்
முன்வர் சுல்தானா

பெண் : சுல்தான் வந்தார்
சுல்தான் வந்தார் சைனா பஜாரு
துணைக்கு ஒருத்தி கூட
வந்தாள் பேசும் குல்சாரு

பெண் : மாதுளம் பழம்போல் இதழில்
மயங்கிக் கிடக்கும் நவாபு
தன் மடியில் கிடக்கும் பெண்களுக்கு
விடியச் சொல்வார் ஜவாபு

பெண் : மாதருக்கும் மதுவுக்கும்தான்
வருஷமெல்லாம் குலாமு
வருஷமெல்லாம் குலாமு
தன் மஞ்சத்திலே பெண்களுக்கு
போடுவாரு சலாமு

பெண் : சுல்தான் வந்தார்
சுல்தான் வந்தார் சைனா பஜாரு
துணைக்கு ஒருத்தி கூட
வந்தாள் பேசும் குல்சாரு

பெண் : சுல்தான் வந்தார்
சுல்தான் வந்தார் சைனா பஜாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here