Singers : P. Banumathi and
T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ohh….ohh..ohhh…ohhh….
Female : Ohh..ohhh…ohh…ohh….oh..

Female : {Summa kedantha
Nelaththa koththi
Sombalillaamae yer nadaththi} (2)
Kammaa karaiya osaththi katti
Karumbu kollaiyil vaaikkaal vetti

Female : Sambaa payirai
Parichchu nattu
Thagantha muraiyil thanneer vittu
{Nellu velainchirukku
Varappum ullae marainchirukku} (2)

Female : Ada {kaadu velainjchenna
Machan namakku
Kaiyung kaalunthaanae mitcham
Kaiyung kaalunthaanae mitcham} (2)

Male : Ippo kaadu velaiyattum
Ponnae namaku
Kaalamirukkuthu pinnae
Kaalamirukkuthu pinnae
Kaadu velaiyattum ponnae namaku
Kaalamirukkuthu pinnae
Kaalamirukkuthu pinnae

Male : {Mannai polanthu
Sorangam vechu
Ponnai edukka kanigal vetti} (2)
{Madhilu vechu maaligai katti
Kadalil moozhgi muththai edukkum} (2)

Male : Vazhi kaatti maramaana
Thozhilaalar vaazhkkaiyilae
Patta thuyarini maarum romba
Kitta nerunguthu neram
Kitta nerunguthu neram
Avar patta thuyarini maarum romba
Kitta nerunguthu neram
Kitta nerunguthu neram

Female : Ada kaadu velainjchenna
Machan namakku
Kaiyung kaalunthaanae mitcham
Kaiyung kaalunthaanae mitcham

Male : Kaadu velaiyattum
Ponnae namaku
Kaalamirukkuthu pinnae
Kaalamirukkuthu pinnae

Female : Maada ozhaichchavan
Vaazhkkaiyilae
Pasi vanthida kaaranam enna machan
Male : Avan thediya selvangal
Vera idaththilae
Servathinaal varum thollaiyadi

Female : Pancha paramparai
Vaazhvatharku
Ini panna vendiyathu enna machan
Male : Thinam kanji kanji endraal
Paanai niraiyaadhu
Sinthichchu munnera venumadi

Female : Vaadikkaiyaai varum
Thunbangalai innum
Needikka seivadhu mosamandro
Male : Irul moodi kidantha
Manamum veluththu
Segarikkum inbam thirumbumadi
Ini segarikkum inbam thirumbumadi

Female : Ada kaadu velainjchenna
Machan namakku
Kaiyung kaalunthaanae mitcham
Kaiyung kaalunthaanae mitcham

Male : Naanae podapporen sattam
Podhuvil
Nanmai purinthidum thittam
Naadu nalam perum thittam

Male & Female :
{Nanmai purinthidum thittam
Naadu nalam perum thittam} (2)

பாடகர்கள் : பி. பானுமதி மற்றும்
டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : ஓ….ஓ……ஓ…… ஓ…… ஓ…..
பெண் : ஓ….ஓ……ஓ…… ஓ…… ஓ…..

பெண் : {சும்மா கெடந்த
நெலத்த கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி} (2)
கம்மா கரைய ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில்
வாய்க்கால் வெட்டி

பெண் : சம்பா பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
{நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு} (2)

பெண் : அட {காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்} (2)

ஆண் : இப்போ காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

ஆண் : {மண்ணைப் பொளந்து
சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி} (2)
{மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்} (2)

ஆண் : வழி காட்டி மரமான
தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்
அவர் பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்

ஆண் : காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

பெண் : மாடா ஒழைச்சவன்
வாழ்க்கையிலே
பசி வந்திட காரணம் என்ன மச்சான்
ஆண் : அவன் தேடிய செல்வங்கள்
வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு
இனி பண்ண வேண்டியது
என்ன மச்சான்
ஆண் : தினம் கஞ்சி கஞ்சி என்றால்
பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும்
துன்பங்களை இன்னும்
நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண் : இருள் மூடி கிடந்த
மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : அட காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்

ஆண் : நானே
போடப்போறேன் சட்டம்
பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

ஆண் மற்றும் பெண் :
{நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்} (2)


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here